இலித்தியம் மாலிப்டேட்டு
இலித்தியம் மாலிப்டேட்டு (Lithium molybdate) என்பது Li2MoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முக்கியமாக இது தொழில்துறை குளிரூட்டிகளில் பல வகையான வினைத்தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது. பயன்கள்தொழிற்சாலை மைய குளிரூட்டி அமைப்புகளில் இலித்தியம் புரோமைடை ஈர்க்கும் கருவிகளில் அரிமானத் தடுப்பியாக இலித்தியம் மாலிப்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற ஒளிபுகும் நீர்மமாகவும், வெண்மை நிறப் படிகத் தூளாகவும் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இரு வடிவங்களிலும் நச்சுப் பொருளாக இது வகைப்படுத்தப்படவில்லை[1]. கடுங்குளிர் ஃபோனான் – மினுமினுப்பு உணரிகளில் Li2MoO4 படிகங்கள் பயன்படுகின்றன. இங்கு இவை சில அரிய அணுக்கரு செயல்முறைகளை ஆராய்வதற்குப் பயன்படுகின்றன. குறையிழப்பு மின்கடத்தாப் பண்புகள் காரணமாக Li2MoO4 பீங்கானை வானலை வாங்கிகளில் பயன்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் மரபார்ந்த சிட்டங்கட்டல் முறைக்குப் பதிலாக அறைவெப்பநிலையில் அடர்த்தல் முறைக்கு சாத்தியமுள்ளதாக நம்பப்படுகிறது[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia