இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு
இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு (Lithium aluminium chloride) என்பது LiAlCl4 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இலித்தியத்தின் குளோரோ அலுமினேட்டு உப்பாகும். ஆங்கிலத்தில் இதைச் சுருக்கமாக LAC என்பார்கள். தையோனைல் குளோரைடில் இடப்பட்ட இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு கரைசல் நீர்மநிலை எதிர்மின் முனையாகவும் சில மின்கலன்களில் மின்பகுளியாகவும் பயன்படுகிறது. உதாரணம் இலித்தியம் – தையோனைல் குளோரைடு மின்கலன். இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டுடன் தையோனைல் குளோரைடு, கந்தக டைஆக்சைடு மற்றும் புரோமின் சேர்த்து மற்றொரு வகையான எதிர்மின் முனை – மின்பகுளி மின்கலன் உருவாக்கப்படுகிறது.
References
|
Portal di Ensiklopedia Dunia