இலித்தியம் அயோடைடு
இலித்தியம் அயோடைடு (Lithium iodide) என்பது LiI என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இலித்தியமும் அயோடினும் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. காற்றில் திறந்து வைக்கும்போது அயோடைடு அயோடினாக ஆக்சிசனேற்றம்[2] அடைவதால் இது மஞ்சள் நிறமாக மாறுகிறது. சோடியம் குளோரைடு படிகமாதலின் மையக்கருத்தைப் பின்பற்றியே இலித்தியம் அயோடைடும் படிகமாகிறது[3] Various hydrates are also known.[4] பயன்கள்உயர்வெப்ப மின்கலன்களில் இலித்தியம் அயோடைடு மின்பகுளியாகப் பயனாகிறது. மேலும் செயற்கையாக இதயத்துடிப்பை முடுக்கிவிடக்கூடிய நீண்ட கால பயன்பாட்டு மின்கலன்களில் இது பயனாகிறது. திடரூப இலித்தியம் அயோடைடு நியூட்ரான்களை கண்டறியும் ஒளிர்பொருளாக விளங்குகிறது[5]. அயோடினுடன் சேர்ந்து அயோடின் கலவையாகவும் சூரிய மின்கலன்களில் சாய உணர் மின்பகுளியாகவும் இது பயன்படுகிறது. கரிம தொகுப்பு வினைகளில் கார்பன் – ஆக்சிசன் பிணைப்பில் பிளவை உண்டாக்க உதவுகிறது. உதாரணமாக மெத்தில் எசுத்தர்களை கார்பாக்சிலிக் அமிலங்களாக மாற்றுவதில் பயன்படுகிறது:[6].
இலித்தியம் அயோடைடு இட அமைப்பியல் ஆய்வுகளில் முகவராக பயன்படுகிறது. சிறுநீரக நச்சுத்தன்மை காரணமாக தற்பொழுது இம்முறை கைவிடப்பட்டு இதற்குப் பதிலாக கரிம அயோடின் மூலக்கூறுகள் பயன் படுத்தப்படுகின்றன. கனிம அயோடின் கரைசல்களால் அதியூடழுத்தம், உயர் பாகுத்தன்மை போன்ற துன்பங்கள் விளைகின்றன[7] . மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia