இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு
இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு (Lithium hexafluorosilicate) என்பது Li2SiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] தயாரிப்புஅறுபுளோரோசிலிசிக் அமிலத்தை இலித்தியம் ஐதராக்சைடு அல்லது இலித்தியம் கார்பனேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது சிலிகான் டெட்ராபுளோரைடை இலித்தியம் புளோரைடுடன் வினைபுரியச் செய்வதன் மூலமோ இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டை தயாரிக்க முடியும்.[3]
இயற்பியல் பண்புகள்இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு நீர் மற்றும் மெத்தனாலில் கரையும். வெள்ளை நிறத்தில் மணமற்ற திடப்பொருளாகக் காணப்படுகிறது. 250 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கப்படும் போது, இது இலித்தியம் புளோரைடு மற்றும் சிலிக்கான்(IV) புளோரைடாக சிதைகிறது. P 321 (எண் 150) என்ற இடக்குழுவில் ஓர் அலகு செல்லுக்கு மூன்று வாய்பாட்டு அலகுகளுடன் முக்கோண படிககட்டமைப்பை கொண்டுள்ளது, சோடியம் அறுபுளோரோசிலிக்கேட்டு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பை ஒத்துள்ளது.[4][5] பயன்கள்இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு மருந்துகள் மற்றும் பிற வேதிச் சேர்மங்கள் தயாரிப்பில் ஓர் இடைநிலையாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia