இலித்தியம் பிளாட்டினேட்டு(Lithium platinate) என்பது Li2PtO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம், பிளாட்டினம், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. ஒரு குறைக்கடத்தியான இச்சேர்மம் அடுக்கிய தேன்கூட்டு கட்டமைப்பில் ஆற்றல் இடைவெளி 2.3 எலக்ட்ரான் வோல்ட்டு உடன் இலித்தியம் பிளாட்டினேட்டு உருவாகிறது. பிளாட்டினம் தனிமத்தை இலித்தியம் கார்பனேட்டுடன் சேர்த்து நேரடியாக கால்சினேற்றம் அதாவது காற்று அல்லது ஆக்சிசனில் 600 பாகை செல்சியசு என்ற உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் இலித்தியம் பிளாட்டினேட்டு உருவாகிறது[3]. இச்சேர்மத்தை இலித்தியம் அயனி மின்கலத்தில் திறன்மிக்க ஒரு மின்வாயாகப் பயன்படுத்த இயலும்[2][4]. இருப்பினும் பிளாட்டினத்தின் அதிக விலை காரணமாக இப்பயன்பாடு குறைக்கப்பட்டு அதற்கு மாற்றாக Li2MnO3 சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[5].
↑ 2.02.12.2O'Malley, Matthew J.; Verweij, Henk; Woodward, Patrick M. (2008). "Structure and properties of ordered Li2IrO3 and Li2PtO3". Journal of Solid State Chemistry181 (8): 1803. doi:10.1016/j.jssc.2008.04.005.
↑Kasuya, Ryo; Miki, Takeshi; Morikawa, Hisashi; Tai, Yutaka (2013). "Synthesis of alkali metal platinates and their dissolution behavior in hydrochloric acid". Journal of the Ceramic Society of Japan121 (1418): 884. doi:10.2109/jcersj2.121.884.