எகிப்தின் ஏழாம் வம்சம்
பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சம் (Seventh Dynasty of Egypt) கிமு 22-ஆம் நூற்றாண்டின் எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் ந்டைபெற்ற ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கலவரத்தின் போது பண்டைய எகிப்தின் ஏழாம் வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 2181 முதல் கிமு 2160 முடிய 21 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர்.[1] இவ்வம்சத்தவரின் தலைநகரமாக மெம்பிஸ் நகரம் விளங்கியது. பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2181 முதல் கிமு 2055 வரையான 125 ஆண்டுகளை பண்டைய எகிப்தின் இருண்ட காலம் என எகிப்தியவில் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த 125 ஆண்டுகளே எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஆகும். [2] எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஏழாம் வம்சம், எட்டாம் வம்சம், ஒன்பதாம் வம்சம் பத்தாம் வம்சம் மற்றும் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன்கள் ஆண்டுகள் ஆண்டனர். எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தில் பண்டைய எகிப்தை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டாகப் பிரித்து இரண்டு வம்சங்களின் பார்வோன்கள் ஆண்டனர். ஏழாம் வம்ச பார்வோன்கள்
பண்டைய எகிப்திய வம்சங்கள்பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia