ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்
![]() சிறீ சத்ய சாய் மாவட்டம் (Sri Sathya Sai district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் அனந்தப்பூர் மாவட்டத்தின் தர்மாவரம், பெனுகொண்டா, கதரி மற்றும் புதிதாக நிறுவப்பட்ட புட்டபர்த்தி வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[1][2] சத்திய சாயி பாபா நினைவாக நிறுவப்பட்ட ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் 7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 17.22 இலட்சம் மக்கள் தொகையையும், 6 சட்டசபை தொகுதிகளையும், 3 வருவாய் கோட்டங்களையும் கொண்டுள்ளது.[3] மாவட்ட நிர்வாகம்7,771 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 32 மண்டல்களும், தர்மாவரம், இந்துப்பூர், புட்டபர்த்தி மற்றும் கதிரி எனும் 4 நகராட்சிகளும் மற்றும் 425 ஊராட்சிகளும் கொண்டது. மண்டல்கள்
அரசியல்ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றம் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:
சட்டமன்றத் தொகுதிகள்:[4]
இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia