விசாகப்பட்டினம் துறைமுகம்17°41′54″N 83°16′43″E / 17.69833°N 83.27861°E
விசாகப்பட்டினம் துறைமுகம் இந்தியாவில் உள்ள 13 முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம் சரக்குகளை கையாளுவதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குகிறது. [2]. விசாகப்பட்டினத் துறைமுகம் இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடா கடற்கரையில் சென்னை துறைமுகத்திற்கும் கொல்கத்தா துறைமுகத்திற்கும் இடையே அமைந்துள்ளது.[3] வரலாறு![]() ![]() ![]() 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மத்திய மாகாணங்களை அணுக கிழக்குக் கரையோரத்தில் ஒரு துறைமுகத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை பிரித்தானியர்களால் உணரப்பட்டது. பிரித்தானிய கடற்படை அதிகாரி கோல்ட் எச். கார்ட்ரைட் ரீட் விசாகப்பட்டினத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கு ஆங்கிலேய அரசிடம் முன்மொழிந்தார். முதலாம் உலகப் போருக்குப் பின்னரே துறைமுகம் கட்ட அனுமதி கிடைத்தது. மத்திய மாகாணங்களில் இருந்து மாங்கனீசு தாது ஏற்றுமதி செய்ய 1927 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வங்காள நாக்பூர் இரயில்வே மூலம் உள் துறைமுகம் கட்டப்பட்டது[4] 1967 ஆம் ஆண்டு திசம்பர் 19 ஆம் தேதி லார்ட் வில்லிங்டனால் 378 லட்சம் செலவில் துறைமுகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. துறைமுகத்தின் அமைப்புவிசாகப்பட்டினத் துறைமுகமானது வெளிப்புற துறைமுகம், உள் துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களை கொண்டுள்ளது. வெளிப்புற துறைமுகத்தில் 17 மீட்டர் நீளமுள்ள கப்பல்களை கையாளும் திறனைக் கொண்டுள்ள இது 6 அடுக்குகளைக் கொண்டுள்ளது. சிறிய உள் துறைமுகமானது 18 அடுக்குகளைக் கொண்டவைகளாக உள்ளன.[3][4] இந்தத் துறைமுகமானது நரவா கெடா எனும் ஆறு கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது. சரக்கு வரத்து நிலப்பகுதிவடகிழக்கு ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், தெற்கு ஒரிஸ்ஸா ஆகியவை இந்தத் துறைமுகத்திற்கான சரக்குவரத்து பகுதிகளாக உள்ளன[5].இரும்புத் தாது, மாங்கனீசுத் தாது, எஃகுப் பொருட்கள், பொதுச் சரக்கு, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவை இந்தத் துறைமுகத்தில் கையாளப்படும் முக்கிய பொருட்களாகும்[6] நவீனமயமாக்கல்விசாகப்பட்டினத் துறைமுகப் பொறுப்புக் கழகமானது 2016-17இல் 130 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டு, 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.[7] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia