அன்னமய்யா மாவட்டம்
அன்னமய்யா மாவட்டம் (Annamayya district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[4] இதன் நிர்வாகத் தலைமையிடம் ராயச்சோட்டி நகரம் ஆகும். சித்தூர் மாவட்டத்தின் மதனப்பள்ளி வருவாய் கோட்டம், ஒய் எஸ் ஆர் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி வருவாய் கோட்டம் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட ராஜம்பேட் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று அன்னமாச்சாரியார் நினைவாக அன்னமய்யா மாவட்டம் நிறுவப்பட்டது.[5] 7,951 சதுர கிலோ மீட்டர்[1] பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 16,97,308,[2] ஆகும். ![]() மாவட்ட நிர்வாகம்![]() ![]() இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 30 மண்டல்களையும், 462 வருவாய் கிராமங்களைக் கொண்டது. மேலும் இம்மாவட்டம் ராஜம்பேட், ராயச்சோட்டி மற்றும் மதனப்பள்ளி என 3 நகராட்சிகளையும் கொண்டது. மண்டல்கள்
அரசியல்![]() ![]() ![]() ![]() இம்மாவட்டம் ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia