கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஒசூர்

கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஒசூர்
வகைஅரசு கல்லூரி
உருவாக்கம்8, ஆகத்து 2011
சார்புதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி (college of poultry production and management, Hosur) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தமிழக அரசால் நடத்தப்படும் கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும்.[2] இக்கல்லூரி 8, ஆகத்து, 2011 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது. 2011-12 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இக்கல்லூரியின் வளாகம் 80 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்கல்லூரி வளாகம் ஒசூர் மத்திகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை வளாகத்தில் உள்ளது. இக்கல்லூரியில் ஆண்டுக்கு 40 மாணவர்களை சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இக்கல்லூரியில் இளங்கலை தொழில் நுட்பம் (கோழியின தொழில்நுட்பம்) பாடமானது நான்கு ஆண்டு படிப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கப்படுகின்றனர்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக இணையதளம்
  2. "கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை! - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. Retrieved 2022-09-19.
  3. K.Rajeshwari,Reporter (2021-09-23). "கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாணவர் சேர்க்கை". www.instanews.city. Retrieved 2022-09-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya