சோடியம் ஈரசிட்டேட்டு
சோடியம் ஈரசிட்டேட்டு (Sodium diacetate) என்பது NaH(C2H3O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலத்தினுடைய உப்பு ஆகும். பதப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரி எதிரியாக சோடியம் ஈரசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புஅசிட்டிக் அமிலத்தை அரை நடுநிலைப்படுத்தலைத் தொடர்ந்து கரைசலை ஆவியாக்குதல் மூலம் இவ்வுப்பு உருவாகிறது. ஓரினயிணைவியாதல் காரணமாக அடர்த்தியான ஒரு கரைசலில் அசிட்டிக் அமிலத்தின் அமிலத்தன்மை அதிகமாதலின் விளைவாக சோடியம் ஈரசிட்டேட்டு உப்பு தோன்றுவதாகக் கருதப்படுகிறது.
அமைப்புஅசிட்டிக் அமிலத்தின் சோடிய அமிலவுப்பு என்றும் ஐதரசன் பிணைப்புடன் கூடிய எதிர்மின் அயனி (CH3CO2)2H−. இன் சோடியம் உப்பு என்றும் இது விவரிக்கப்படுகிறது. இரண்டு ஆக்சிசன் (O-O) அணுக்களுக்கு இடையேயான இடைவெளி 2.47 Å [1] ஆகவும் இருக்கிறது. இவ்வுப்பு கணிசமான அளவில் காணப்படவில்லை என்றாலும் நிலைப்புத்தன்மை கொண்ட படிகங்களாக உருவாகிறது. பயன்கள்ஒரு உணவுக் கூட்டுப்பொருளாக[2] உப்பாகவும் புளிப்புக்காடியின் சுவை மணமும் இவ்வுப்பு பங்களிக்கும் பயன்களாகும். உணவுக் குறியீட்டு எண் E262 என ஐரோப்பிய ஒன்றியம் இவ்வுப்பை அடையாளப்படுத்துகிறது மேற்கோள்கள்
இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia