KN3, RbN3, CsN3, மற்றும் TlN3 ஆகிய சேர்மங்கள் யாவும் ஒரே வகையான நாற்கோண மூலக்கூற்று[4]அமைப்பிலேயே படிகமாகின்றன. அசைடானது நேரெதிரான மறைக்கப்பட்ட திசையமைவுகளில் எட்டு நேர்அயனிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்நேர் அயனிகள் விளிம்புநிலை எட்டு நைட்ரசன் மையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன[5].
K,Rb,Cs,TlN3ஆகியனவற்றில் அசைடின் ஒருங்கிணைவு
தயாரிப்பு மற்றும் வினைகள்
பொட்டாசியம் கார்பனேட்டை அவ்விடத்தில்[6] உருவான ஐதரசோயிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதால் பொட்டாசியம் அசைடு தயாரிக்கலாம். மாறாக இதனையொத்த சோடியம் அசைடோ விசுலைசெனசு செயல்முறையில் சோடியம் அசைடையும் நைட்ரசு ஆக்சைடையும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது[7] .
சூடுபடுத்தும் போது அல்லது புற ஊதாக்கதிர் கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது பொட்டாசியம் உலோகமாகவும் நைட்ரசன்வாயுவாகவும் சிதைவடைகிறது[8] . கார உலோக அசைடுகள் சிதைவடையும் வெப்ப அளவுகள் வருமாறு: NaN3 (275 °செ), KN3 (355 °செ), RbN3 (395 °செ), CsN3 (390 °செ).[9]
தீங்குகள்
சோடியம் அசைடு போலவே பொட்டாசியம் அசைடும் நச்சுத்தன்மை மிக்கது ஆகும். இதனுடன் தொடர்புடைய சோடியம் அசைடின் அதிகபட்ச அடர்த்தி ஏற்பு மதிப்பு மில்லியன் பகுதிகளுக்கு 0.07 பகுதிகளாகும். அசைடுகளின் நச்சுத்தன்மை அவற்றின் சைட்டோகுரோம் ஆக்சிடேசு எதிர்ப்பில் இருந்து தோன்றுகின்றன.
↑T. D. Hughes; L. F. Welch (1970). "Potassium Azide as a Nitrification Inhibitor". Agronomy Journal (American Society of Agronomy) 62: 595–599. doi:10.2134/agronj1970.00021962006200050013x.
↑Ulrich Müller "Verfeinerung der Kristallstrukturen von KN3, RbN3, CsN3 und TIN3" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1972, Volume 392, 159–166. எஆசு:10.1002/zaac.19723920207
↑P. W. Schenk "Alkali Azides from Carbonates" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 475.
↑Horst H. Jobelius, Hans-Dieter Scharff "Hydrazoic Acid and Azides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_193
↑Tompkins, F. C.; Young, D. A. (1982). "The Photochemical and Thermal Formation of Colour Centres in Potassium Azide Crystals". Proceedings of the Royal Society of London. Series A, Mathematical and Physical Sciences 236 (1204): 10–23.
↑E. Dönges "Alkali Metals" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 475.