பொட்டாசியம் பைசல்பேட்டுடன் (KHSO4) அதிக கரைதிறன் கொண்ட உப்பான அமோனியம் பெராக்சி இருசல்பேட்டு (NH4)2S2O8. கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிக்கலாம். பொதுவாக பொட்டாசியத்தின் சல்பேட்டு உப்பை புளோரினைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் பொட்டாசியம் பெர்சல்பேட்டைத் தயாரிப்பது உரிய வழிமுறையாகும்.
பயன்கள்
இவ்வுப்பு பல ஆல்கீன்களின்சிடைரின்-பியூட்டாடையீன் ரப்பர், பல்நாற்புளோரோ எத்திலீன் போன்ற பலபடியாக்கல் வினைகளையும் அவற்றைச் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கான வினையையும் தொடங்கி வைக்கிறது. கரைசலாக இருக்கும்போது இவ்விரு எதிர் அயனிச் சேர்மம் பிரிகையடைந்து தனி உறுப்புகளாக மாறுகிறது:[3].
ஒரு வலுவான வெளுக்கும் முகவராக இது ஐதரசன் பெராக்சைடுடன் சேர்க்கப்பட்டு தலைமுடி சாயங்களை வெளுக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாதிரிகளுக்கு குறிப்பாக நீர்க்கரைசல்களுடன் ஒரு ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு நைட்ரசன் அடங்கிய சேர்மங்களை உறுதிப்படுத்த இச்சேர்மம் உதவுகிறது.[5]
முன்னெச்சரிக்கை
வலுவான ஆக்சிசனேற்றியாக இருப்பதால் கரிமச் சேர்மங்களுடன் பொருந்தாமல் முரண்பட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
↑ 1.01.1F. Feher, "Potassium Peroxydisulfate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 392.