சோடியம் பெர்குளோரேட்டு (Sodium perchlorate) என்பது NaClO4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பொதுவாகக் காணப்படும் பெர்குளோரேட்டு உப்புகளில் அதிக கரைதிறன் கொண்ட சேர்மமாக இது கருதப்படுகிறது. வெண்மை நிறப்படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் நீரை உறிஞ்சும் தன்மையுடன் உள்ளது. நீர் மற்றும் ஆல்ககாலில் நன்கு கரைகிறது. பொதுவாக இச்சேர்மம் ஒருநீரேற்று சேர்மமாக சாய்சதுரப் படிகங்களாகக் கிடைக்கிறது[1].
பலவிதமான பெர்குளோரேட்டு உப்புகள் தயாரிப்பில் சோடியம் பெர்குளோரேட்டு முன்னோடியாக விளங்குகிறது. மற்ற பெர்குளோரேட்டுகள் இதனுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவு கரைதிறனையே பெற்றிருக்கின்றன. சோடியம் பெர்குளோரேட்டின் கரைதிறன் 25 பாகைசெல்சியசுவெப்பநிலையில் 209கி/100 மி.லி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சோடியம் பெர்குளோரேட்டுடன் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் பெர் குளோரிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.
சோடியம் பெர்குளோரேட்டு நீருறிஞ்சும் சேர்மமாக இருப்பதால் அதை பட்டாசுத் தொழிலில் பயன்படுத்துவதில்லை. அமோனியம் மற்றும் பொட்டாசியம் பெர்குளோரேட்டுகள் பட்டாசுத் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. சோடியம் பெர்குளோரேட்டு மற்றும் பொட்டாசியம் அல்லது அமோனியம் குளோரைடுகளின் கரைசலை இரட்டைச் சிதைவுக்கு உட்படுத்துவதால் இவ்வுப்புகளைத் தயாரிக்கமுடியும்.
ஆய்வகப் பயன்கள்
அதிகம் வினைபுரியாத மின்பகுளியாக சோடியம் பெர்குளோரேட்டு ஆய்வகங்களில் பலவழிகளில் பயன்படுகிறது. மூலக்கூற்று உயிரியியலில் டி.என்.ஏவைப் பிழிந்தெடுக்கும் முறைகள் மற்றும் கலப்பினமாகும் வினைகள் இவ்வினைகளுக்கு உதாரணமாகும்.
மருந்துப் பொருளாக
அதிதைராயிடு நோய் பாதிப்புடையவர்கள் அயோடின் எடுத்துக்கொள்வதைத் தடுக்கும் மருந்தாக சோடியம் பெர்குளோரேட்டு பயனாகிறது[3].
↑Becker C. [Prophylaxis and treatment of side effects due to iodinated contrast media relevant to radiological practice]. Radiologe. 2007 Sep;47(9):768-73.
↑Helmut Vogt, Jan Balej, John E. Bennett, Peter Wintzer, Saeed Akbar Sheikh, Patrizio Gallone "Chlorine Oxides and Chlorine Oxygen Acids" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a06_483