சோடியம் குரோமேட்டு(Sodium chromate) என்பது Na2CrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். மஞ்சள் நிறத்துடன் நீருறிஞ்சும் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தால் நான்கு, ஆறு மற்றும் பத்து நீரேற்றுகளாக உருவாக முடியும். தாதுக்களில் இருந்து குரோமியத்தைப் பிரித்தெடுக்கும்போது ஒரு இடைநிலைப் பொருளாக சோடியம் குரோமேட்டு உருவாகிறது. பிற ஆறு இணைதிறன் குரோமியம் சேர்மங்களைப் போல இச்சேர்மமும் நச்சுத்தன்மையுடனும் புற்றுநோய் ஊக்கியாகவும் செயல்படுகிறது.[1]
தயாரிப்பு முறை
சோடியம் கார்பனேட்டு முன்னிலையில் குரோமியம் தாதுக்களை காற்றில் வறுக்கும் போது சோடியம் குரோமேட்டைப் பெருமளவில் தயாரிக்க முடியும்.
Cr2O3 + 2 Na2CO3 + 3/2 O2 → 2 Na2CrO4 + 2 CO2
இரும்பு ஆக்சைடுகளில் இருந்து பிரித்து, தண்ணீரால் பிரித்தெடுக்க இயலும் குரோமியமாக மாற்ற இச்செயல்முறை உதவுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவுடன் குரோமேட்டு உப்பு அடுத்ததாக சோடியம் இருகுரோமேட்டு உப்பாக மாற்றப்படுகிறது. இவ்வுப்பே பெரும்பாலான குரோமியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகும். தொழிற்சாலைகளில் குரோமியம் ஆக்சைடை சோடியம் குரோமேட்டுடன் கந்தகம் சேர்த்து தயாரிக்கிறார்கள்.
அமிலக் காரப் பண்புகள்
அமிலங்களுடன் சேர்த்து வினைப்படுத்தும்போது சோடியம் குரோமேட்டு, சோடியம் இருகுரோமேட்டாக மாற்றப்படுகிறது.
குரோமியத்தை அதன் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதில் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைத் தவிர்த்து, பெட்ரொலியத் தொழிற்சாலைகளில் சோடியம் குரோமேட்டு அரிமானத் தடுப்பியாகப் பயனாகிறது.[1]நெசவுத் தொழிற்சாலைகளில் சாயமேற்றும் துணைப்பொருளாகவும், மரச்சாமான்கள் பாதுகாப்பிலும் பயன்படுகிறது.[1] and a wood preservative.[2]இரத்தச் சிவப்பு அணுக்களின்கன அளவை உறுதிப்படுத்தும் மருந்துப் பொருளாகவும் நோயறியும் மருந்தியலில் பயன்படுகிறது.[3]