தாதிங் மாவட்டம்![]() தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्लाⓘ, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாதிங்பேசி நகரம் ஆகும். 1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். [1] இமயமலையின் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள தாதிங் மாவட்டம்[2], பிரிதிவி நெடுஞ்சாலை, காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களை இணைக்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையான கோர்க்கா மாவட்டத்தை புத்தி கண்டகி ஆறு பிரிக்கிறது. மாவட்ட எல்லைகள்தாதிங் மாவட்ட எல்லைகள் விவரம்:
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்தாதிங் மாவட்டத்தில் 80% பண்ணை நிலங்களும் மற்றும் 20% காடுகளும் கொண்டது.
மக்கள் தொகையியல்1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் தமாங் மற்றும் குரூங் இன மக்களும், தெற்கில் செத்திரி இன மக்களும், மத்தியப் பகுதியில் நேவார் இன மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் நேவாரி மொழி, நேபாள மொழி, தமாங் மற்றும் குரூங் மொழிகள் பேசப்படுகிறது. ஆன்மீகத் தலங்கள்
ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்![]() தாதிங் மாவட்டத்தில் ஐம்பத்தி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia