பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III)
பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III) (Potassium hexacyanochromate(III)) C6CrK3N6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். மூன்று பொட்டாசியம் நேர்மின் அயனிகளும் ஒரு [Cr(CN)6]3− எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ள இச்சேர்மம் மஞ்சள் நிறத்துடன் பாராகாந்தப்பண்பை கொண்டுள்ளது. பொட்டாசியம் பெரிசயனைடுடன் சமச்சீரற்ற கட்டமைப்பை பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III) வெளிப்படுத்துகிறது. தயாரிப்புகுரோமியம்(III) உப்புகளுடன் பொட்டாசியம் சயனைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுசயனோகுரோமேட்டு(III) உருவாகும்.[1][2][3] வினைகள்அறுசயனோகுரோமேட்டு(III) ஒடுக்கவினைக்கு உட்படுத்தப்பட்டால் முறையே Cr(II) மற்றும் Cr(0) வழிப்பொருட்களையும் [Cr(CN)6]4- மற்றும் [Cr(CN)6]6- அயனிகளையும் கொடுக்கிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia