பொட்டாசியம் பைபுளோரைடு
பொட்டாசியம் பைபுளோரைடு (Potassium bifluoride) KHF2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர்மின் அயனியும் பை புளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நிறமற்று காணப்படும் இதை கண்ணாடியை அறுக்கப் பயன்படுத்துகிறார்கள். அறுப்பானாகவும் பொருள்களை தூய்மையாக்கவும் பயன்படுவதால் வணிக முக்கியத்துவம் கொண்ட வேதிப்பொருளாக பொட்டாசியம் பைபுளோரைடு பார்க்கப்படுகிறது. [2] தயாரிப்புபொட்டாசியம் கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடை ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து இதை தயாரிக்கலாம். எட்மண்டு பிரேமி முதன் முதல் இந்த உப்பை தயாரித்தார்.
மேலும் இரண்டு சமமான ஐதரசன் புளோரைடுடன் KH2F3 (CAS#12178-06-2, m.p. 71.7 C) உற்பத்தியாகிறது.
KHF2 வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு ஐதரசன் புளோரைடைக் கொடுக்கிறது.
பயன்கள்உருகிய பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி புளோரின் தயாரிக்கப்படுகிறது. 1886 ஆம் ஆண்டு என்றி மொய்சன் முதன் முதலில் இதைக் கண்டறிந்தார். [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia