பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டு (Potassium heptafluoroniobate) என்பது F7K2Nb என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். K2NbF7 என்ற மூலக்கூற்று வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையும். நையோபியத்தின் மிக முக்கியமான புளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தாண்டலம்|தாண்டலத்திலிருந்து நையோபியத்தை பிரிப்பதில் இது பெரும்பாலும் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு தனிமங்களும் பொதுவாக தாதுக்களில் ஒன்றாகக் காணப்படுகின்றன (எ.கா. கூலும்பைட்டு) மேலும் இவை மிகவும் ஒத்த சேர்மங்களை உருவாக்குவதால் இவவற்றின் பிரிப்பும் சவாலாக உள்ளது. புளோரைடுகள் மற்றும் ஆக்சிபுளோரைடுகளின் நிலைத்தன்மை மற்றும் கரைதிறன் ஆகியவை இவற்றைறைப் பிரிப்பதற்கு அடிப்படையாகும். பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டு உப்பைக் குறைத்தல் வினைக்கு உட்படுத்தினால் நையோபியம் உலோகம் கிடைக்கிறது.[3]
பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டும் பொட்டாசியம் எப்டாபுளோரோதாண்டலேட்டும் ஒத்தகட்டமைப்பைக் கொண்டுள்ளன. எதிர்மின் அயனி தோராயமான C2v சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது. இது முகம் மூடிய முக்கோணப் பட்டகம் ஆகும். Nb-F பிணைப்பு தூரங்கள் 1.940--1.978 Å வரம்பில் உள்ளன.[5]
அலைமாலை அளவீடுகள் எப்டாபுளோரைடானது கரைசலில் எக்சாபுளோரைடாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.[6]
↑W. Kwasnik (1963). "Potassium Heptafluoroniobate (V)". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=255. NY,NY: Academic Press.
↑Brown, G. M.; Walker, L. A. (1966). "Refinement of the structure of potassium heptafluoroniobate, K2NBF7, from neutron-diffraction data". Acta Crystallographica20 (2): 220–229. doi:10.1107/s0365110x66000458. Bibcode: 1966AcCry..20..220B.
↑Keller, O. L. (1963). "Identification of Complex Ions of Niobium(V) in Hydrofluoric Acid Solutions by Raman and Infrared Spectroscopy". Inorganic Chemistry2 (4): 783–787. doi:10.1021/ic50008a029.