பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு
பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு (Potassium chlorochromate) என்பது KCrClO3 [4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். குளோரோகுரோமேட்டு [CrO3Cl]− அயனியின் பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு எனக் கருதப்படுகிறது. ஆரஞ்சு நிறமுடைய இச்சேர்மம் தண்ணீரில் கரையும். கரிமச் சேர்மங்களை ஆக்சிசனேற்றம் செய்யவும் அரிதாக இது பயன்படுத்தப்படும். கண்டுபிடிப்பாளர் யூகின் மெல்ச்சியர் பெலிகாட் என்பவரின் நினைவாக சில சமயங்களில் இதை பெலிகாட் உப்பு என்று அழைக்கிறார்கள். தயாரிப்புபொட்டாசியம் டைகுரோமேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி பொதுவாக பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. குரோமைல் குளோரைடுடன் பொட்டாசியம் குரோமேட்டைச் சேர்த்து பொட்டாசியம் குளோரோகுரோமேட்டைத் தயாரிக்கும் பாதை மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது:[5]
கட்டமைப்புநான்முக குளோரோகுரோமேட்டு எதிர்மின் அயனியை இவ்வுப்பு கொண்டுள்ளது. சராசரியாக Cr=O பிணைப்பின் நீளம் 159 பைக்கோமீட்டர்களும் மற்றும் Cr-Cl இடையிலான இடைவெளி 219 பைக்கோ மீட்டர்களுமாக உள்ளது[6]. வினைகள்காற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருந்தாலும் இச்சேர்மத்தின் நீரிய கரைசல்கள் நீராற்பகுப்புக்கு உட்படுகின்றன. அடர் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது இது குரோமைல் குளோரைடாக மாறுகிறது. 18-கிரௌன்-6 என்றழைக்கப்படும் 1,4,7,10,13,16- எக்சாக்சாசைக்ளோக்டாடெக்கேன் என்ற கரிமச் சேர்மத்துடன் சேர்த்து சூடுபடுத்தும்போது கொழுப்பு விரும்பி உப்பான [K(18-கிரௌன்-6]CrO3Cl.உருவாகிறது[7]. பென்சைல் ஆல்ககாலை ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் இது ஆக்சிசனேற்றம் செய்கிறது. இதனுடன் தொடர்புடைய உப்பான பிரிடினியம் குளோரோகுரோமேட்டு பொதுவாக இவ்வினையில் பயன்படுத்தப்படுகிறது[8]. பாதுகாப்புஉடலுக்குள் செலுத்தப்பட்டால் பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு ஒரு நச்சாக உடலை பாதிக்கிறது. பல்வேறு தீங்குகளுடன் உடலை நஞ்சாக்குவதோடு சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மனித தோலில் பட நேர்ந்தாலும் குறிப்பாக சுவாசிக்க நேர்ந்தாலும் ஒவ்வாமை, கண் எரிச்சல், தோல் அரிப்பு முதலான பாதிப்புகள் உண்டாகின்றன [9]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia