பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு
பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு (Potassium hydrogenoxalate) KHC2O4 அல்லது K+•HO2C-CO2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும், பொட்டாசியம் பையாக்சலேட்டு, அமில பொட்டாசியம் ஆக்சலேட்டு, ஒற்றைகார பொட்டாசியம் ஆக்சலேட்டு, சாரெல் உப்பு, சால் அசிட்டோசெல்லா, எலுமிச்சை உப்பு என்ற பல்வேறு பெயர்களாலும் இவ்வுப்பு அழைக்கப்படுகிறது. ஐதரசனாக்சலேட்டு எதிர்மின் அயனியின் மிகப்பொதுவான ஓர் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. பொட்டாசியம் ஐதராக்சைடும் ஆக்சாலிக் அமிலமும் 1:1 என்ற மோலார் விகிதத்தில் வினைபுரிந்து பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு உருவாகிறது. சில தாவரங்களில் குறிப்பாக சாரெல் போன்ற பல்லாண்டுத் தாவரங்களில் பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு காணப்படுகிறது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படவியலில், பளிங்குக்கல் மெருகூட்டுதல், மைக்கறை அகற்றுதல் போன்ற செயல்பாடுகளுக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். பண்புகள்நீரற்ற பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு வெண்மையானது. நெடியற்றது. படிகத் திண்மமான இவ்வுப்பு நீரில் கரையக்கூடியதாகவும் (அறை வெப்பநிலையில் 2.5கி/100 கிராம்) நீரை உறிஞ்சக்கூடியதாகவும் உள்ளது. 50 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் மிகக்குறைவான கரைதிறன் கொண்ட பொட்டாசியம் டெட்ராக்சலேட்டு உருவாகி வீழ்படிவாகிறது [1]. ஒற்றைநீரேற்றான பொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு (KHC2O4•H2O) 100 °செல்சியசு வெப்பநிலையில் நீரை இழக்கிறது [2]. நீரற்ற இவ்வுப்பு குறிப்பிடத்தக்க ஒருக்கமில்லா மீட்சிப்பண்பை பெற்றுள்ளது. ஏனெனில் இதன் கட்டமைப்பில் ஐதரசன் பிணைக்கப்பட்ட ஐதரசனாக்சலேட்டு எதிர்மின்னயனி அணிவரிசைத் தகடுகள் K–O அயனிப் பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன [3]. நச்சுத்தன்மைபொட்டாசியம் ஐதரசனாக்சலேட்டு கண்களில், சளிச்சவ்வுகளில், இரைப்பை – குடல் வழியில் எரிச்சலை உண்டாக்குகிறது. மேலும் இவ்வுப்பு மாரடைப்பையும் மரணத்தையும் கூட ஏற்படுத்தலாம் [1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia