பொட்டாசியம் பெர்ரோசயனைடு
பொட்டாசியம் பெர்ரோசயனைடு (Potassium ferrocyanide) என்பது K4[Fe(CN)6]·3H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். [Fe(CN)6]4− அணைவின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் ஒற்றைச்சரிவச்சுப் படிகக் கட்டமைப்பில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு உருவாகிறது. பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. தயாரிப்பு1752 ஆம் ஆண்டில், பிரெஞ்சு வேதியியலாளர் பியர் இயோசெப் மக்கெர் (1718-1784) முதன் முதலில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு தயாரிப்பை முதன்முதலில் அறிவித்தார். புருசியன் நீலத்தை (இரும்பு(III) பெர்ரோசயனைடு) பொட்டாசியம் ஐதராக்சைடுடன் வினைபுரியச் செய்து இதை தயாரித்தார்.[4][5] நவீன தயாரிப்பு முறைஐதரசன் சயனைடு, இரும்பு(II) குளோரைடு மற்றும் கால்சியம் ஐதராக்சைடு ஆகியவற்றிலிருந்து தொழில்துறையில் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) உற்பத்தி செய்யப்படுகிறது. இவை ஒன்றாகச் சேர்வதனால் Ca2[Fe(CN)6]·11H2O என்ற கரைசல் உருவாகும். பின்னர் இக்கரைசல் பொட்டாசியம் உப்புகளுடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டு கலப்பு கால்சியம்-பொட்டாசியம் உப்பு CaK2[Fe(CN)6] வீழ்படிவாகும். இவ்வீழ்படிவுடன் பொட்டாசியம் கார்பனேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் டெட்ரா பொட்டாசியம் உப்பு கிடைக்கும்.[6] வரலாற்று முறைவரலாற்று ரீதியாக, பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மம் நைட்ரசன் கரிமப் பொருட்கள், இரும்பு நிரப்பிகள் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்டது.[7] சிதைந்த கொம்புகள், குப்பை கூளம், வேண்டாத சீவல்கள், தோல், அல்லது உலர்ந்த இரத்தம் போன்றவை பொதுவான நைட்ரசன் மற்றும் கார்பன் மூலங்களாகும். ஐதரசன் சயனைடிலிருந்து நகர எரிவாயுவை சுத்திகரித்தல் செயல்முறையில் விளைந்த ஆக்சைடுகளிலிருந்தும் இது வணிக ரீதியாக பெறப்பட்டது. வேதி வினைகள்நைட்ரிக் அமிலத்துடன் பொட்டாசியம் பெர்ரோசயனைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் H2[Fe(NO)(CN)5] உருவாகிறது. சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து இந்த இடைநிலையை நடுநிலையாக்கிய பிறகு, சோடியம் நைட்ரோபுருசைடின் சிவப்பு நிறப்படிகங்கள் படிகமாகின்றன.[8] தொடர்ந்து குளோரின் வாயுவைச் சேர்த்து சூடாக்கினால் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மம் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(III) சேர்மமாக மாற்றமடைகிறது:
பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மத்துடன் பெர்ரிக் உப்புகளைச் சேற்த்து சூடுபடுத்தி புருசியன் நீலம் தயாரிப்பது பரவலாக அறியப்பட்ட ஒரு வினையாகும். பயன்பாடுகள்பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மம் தொழில்துறையில் பல முக்கிய பயன்பாடுகளைக் காண்கிறது. இதுவும் இதனுடன் தொடர்புடைய சோடியம் உப்பும் சாலை உப்பு மற்றும் மேசை உப்பு இரண்டுக்கும் கட்டியாக்கத் தடுப்பு முகவராகப் பயன்படுகிறது. பொட்டாசியம் மற்றும் சோடியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) உப்புகள் வெள்ளீயத்தை சுத்திகரிப்பதிலும் மாலிப்டினம் தாதுக்களிலிருந்து தாமிரத்தைப் பிரிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன. பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) மது மற்றும் சிட்ரிக் அமிலம் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.[6] 2017 ஆம் ஆண்டின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் அறுசயனிடோபெர்ரேட்டு(II) (ஐ 535–538) உப்பு சேர்க்கைகள் என இரண்டு உணவு வகைகளில் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. இது கால்நடை தீவனத்திலும் பயன்படுத்தப்படுகிறது.[9] ஆய்வகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட்டின் செறிவைத் தீர்மானிக்க பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) பயன்படுத்தப்படுகிறது. ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகளின் அடிப்படையில் தரம்பார்த்தல் செயல்பாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) ஆனது பீட்டா-கேலக்டோசிடேசுக்கு ஓர் இடையகத்தை வழங்கப் பயன்படும் பொட்டாசியம் பெர்ரிசயனைடு மற்றும் பாசுபேட்டு இடையகக் கரைசலில் பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) பயன்படுத்தப்படுகிறது. 1900 ஆம் ஆண்டுக்கு முன், காசுட்னர் செயல்முறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) கார உலோக சயனைடுகளின் மிக முக்கியமான ஆதாரமாக இருந்தது.[6] இந்த வரலாற்று செயல்முறையில், பொட்டாசியம் சயனைடு பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மத்தை சிதைப்பதன் மூலம் தயாரிக்கப்பட்டது:[6] In this historical process, potassium cyanide was produced by decomposing potassium hexacyanidoferrate(II):[7] K4[Fe(CN)6] → 4 KCN + FeC2 + N2 கட்டமைப்புமற்ற உலோக சயனைடுகளைப் போலவே, திண்ம பொட்டாசியம் அறுசயனிடோபெர்ரேட்டு(II) சேர்மமும் நீரேற்று மற்றும் நீரற்ற உப்புகள் என இரண்டும் சிக்கலான பல்லுருவ அமைப்பைக் கொண்டுள்ளன. பலபடி CN ஈந்தணைவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள K+ அயனிகளுடன் குறுக்காக இணைக்கப்பட்ட எண்முக [Fe(CN)6]4− மையங்களைக் கொண்டுள்ளது.[10] பாதுகாப்புசிறுநீரகங்கள் பெர்ரோசயனைடு நச்சுத்தன்மையின் பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு ஆகும்.[11] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia