பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு
பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு (Potassium hypochromate) என்பது K3CrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் அசாதாரண Cr5+ அயனி இடம்பெற்றுள்ளது. தண்ணீரில் நிலையற்றும் காரக் கரைசலில் நிலைப்புத்தன்மையோடும் காணப்படுகிறது.[1] பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டைப் போன்ற படிக அமைப்பைக் கொண்டிருக்கிறது.[2] தயாரிப்புபொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு சேர்மம் பொதுவாக குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்மங்களை 850 °செல்சியசு வெப்பநிலையில் ஆர்கானின் கீழ் வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.:[2]
குரோமியம் ஆக்சைடை பொட்டாசியம் குரோமேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டைத் தயாரிக்கலாம். இவ்வினையில் Fe2+ அயனிகள் இல்லாதது முக்கியமாகும், ஏனெனில் இது Cr(V) அயனிகளை Cr(III) அயனிகளாகக் குறைக்கும்.[1] வினைகள்காரம் இல்லாதபோது அல்லது குறைவாக இருக்கும்போது பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு தண்ணீரில் சிதைந்து குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் பொட்டாசியம் குரோமேட்டை உருவாக்குகிறது. பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து குரோமியம்(III) ஆக்சைடு, பொட்டாசியம் குரோமேட்டு மற்றும் பொட்டாசியம் குளோரைடை உருவாக்குகிறது:
ஐதரோபெராக்சைடுகள் போன்ற பிற குறைக்கும் முகவர்கள் ஐப்போகுரோமேட்டு அயனியை குரோமேட்டு அயனிகளாக ஆக்சிசனேற்ற முடியும்.[1] மிக அதிக வெப்பநிலையில், இது பொட்டாசியம் குரோமேட்டு மற்றும் பொட்டாசியம் உலோகமாக சிதைகிறது.[2] பொட்டாசியம் ஐப்போகுரோமேட்டு சேர்மம், குரோமைல் குளோரோசல்பேட்டு போன்ற பல்வேறு சேர்மங்களை குளோரோசல்பூரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்து ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia