பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு
பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு (Potassium hexafluoroantimonate) என்பது F6KSb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] தயாரிப்புபொட்டாசியம் பைரோ ஆண்டிமோனேட்டுடன் (K2H2Sb2O7) ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது திண்ம ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு, 30 சதவீத ஐதரசன் பெராக்சைடு கரைசல், 48 சதவீத ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவை சேர்ந்த கலவையை சூடுபடுத்தியோ பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு தயாரிக்கப்படுகிறது.[3] ஆண்டிமனி பெண்டாபுளோரைடையும் பொட்டாசியம் அறுபுளோரோமாங்கனேட்டையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு உருவாகும். [4]
பயன்செயல் திறன் மிக்க மருந்துகளை தயாரிக்கும்போது மருந்து இடைநிலையாக பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு பயன்படுகிறது.[5] வேதிப் பண்புகள்அடர் அமிலங்கள் மற்றும் ஆக்சிசனேற்றும் முகவர்களுடன் வினைபுரியும்போது பொட்டாசியம் அறுபுளோரோ ஆண்டிமோனேட்டு தீவிரமான வினையை வெளிப்படுத்துகிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia