அரசினர் கலைக் கல்லூரி, சேலம்
அரசினர் கலைக் கல்லூரி, சேலம் (Government Arts College, Salem) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் தரச் சான்றுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக இயங்கிவருகிறது.[2] வரலாறுஅரசினர் கலைக் கல்லூரி, சேலம் (தன்னாட்சி) தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1857ஆம் ஆண்டில் ஆங்கிலேய மேல்நிலைப் பள்ளியாக அலெக்ஸாண்டர் ஜான் அர்பத்னாட் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் மாவட்ட பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1879-ல் சென்னைப் பல்கலைக்கழகம் உடன் இணைந்த இரண்டாம் நிலைக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இதன்பிறகு படிப்படியாக வளர்ச்சி பெற்று 1944-ல் முதல் நிலைக் கல்லூரியாக மாறியது. 2000-ல் இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தர நிர்ணயச் சான்று அவை வழங்கும் குழுவினரால் மூன்று நட்சத்திரத் தொகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2006-ல் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அதே தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை வழங்கும் குழுவினரால் 'பி++' தகுதி பெற்றது. 2007-ல் தன்னாட்சி தகுதிப் பெற்று இக்கல்லூரி சிறப்பாக இயங்கி வருகிறது. அமைவிடம்இக்கல்லூரி சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் செர்ரி சாலையில் அமைந்துள்ளது. சுழற்சி வகுப்பு முறை2007-2008ஆம் கல்வி ஆண்டிலிருந்து இக்கல்லூரியில் பட்டப் படிப்பு பாடங்களுக்கு சுழற்சி முறையில் இருசுழற்சிகளாக (சுழற்சி 1 -காலை, சுழற்சி 2-பிற்பகல்) வகுப்புகள் நடைபெறுகின்றன. இளநிலைப் படிப்புகள்
முதுநிலைப் படிப்புகள்
மேலும் பல்வேறு துறைகளில் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனையும் காண்கமேற்கோள்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia