ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள்
ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள் (Alampur Navabrahma Temples) சிவன், பிரம்மா]] போன்ற கடவுளர்களின் 9 கோயில்களின் தொகுப்பாகும். நவபிரம்மா கோயில் தொகுதிகள், சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் கிபி 7 முதல் 9ஆம் நூற்றாண்டில் நகரா கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டது.[1] இக்கோயில்கள் தெலங்காணா மாநிலத்தில், ஜோகுலம்பா மாவட்டத்தின் ஆலம்பூர் கிராமத்தில், துங்கபத்திரை ஆறும், கிருஷ்ணா ஆறும் கூடுமிடத்தில், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இதனருகே 1.5 கிலோ மீட்டர் தொலைவில் ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் உள்ளது. [1] இக்கோயில்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், இதனை நவபிரம்மா கோயில்கள் என அழைக்கப்படுகிறது. சைவம், வைணவம் மற்றும் சாக்தப் பிரிவினர்களுக்கான இக்கோயில்கள் செவ்வக வடிவில் நகரா கட்டிடக் கலை நயத்தில், சாளுக்கியர் ஆட்சியில் கிபி 8ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டது.[2]இக்கோயில்களில் புகழ்பெற்றது சங்கமேஷ்வரர் கோயில் மற்றும் நவபிரம்மா கோயில்கள் ஆகும். தில்லி சுல்தானகம் ஆட்சியின் போது கிபி 14ஆம் நூற்றாண்டில் நவபிரம்மா கோயில்கள் சிதைக்கப்பட்டது.[3][4][5] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1980ஆம் ஆண்டிற்குப் பின்னர் இக்கோயில்களின் சிதிலங்களை சீரமைத்தனர்.[5][6] அமைவிடம்ஐதராபாத் நகரத்திற்கு தெற்கே 215 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பியிலிருந்து வடகிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், பாதமிக்கு கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. படக்காட்சிகள்நவ பிரம்மா கோயில்களில் அர்க்க பிரம்மா கோயில், சுவர்க்க பிரம்மா கோயில், பால பிரம்மா கோயில், கருட பிரம்மா கோயில், குமார பிரம்மா கோயில் மற்றும் விஷ்வ பிரம்மா கோயிலக்ளின் சிற்பங்கள். சுவர்க்க பிரம்மா கோயில்
பால பிரம்மா கோயில்
கருட பிரம்மா கோயில் குமார பிரம்மா கோயில்
![]() விஷ்வ பிரம்மா கோயில் இந்த நவப்பிரம்மா கோயில்கள் அருகே இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இதில் நவப்பிரம்மா கோயில்களின் சிதிலமடைந்த சிற்பங்கள் மற்றும் தூண்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[7][8] இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia