பிரசியோடைமியம் ஆக்சலேட்டு
பிரசியோடைமியம் ஆக்சலேட்டு (Praseodymium oxalate) என்பது C6O12Pr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. இளம் பச்சைநிற படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையாமல் படிக நீரேற்றாக உருவாகிறது. தயாரிப்புஆக்சாலிக் அமிலத்துடன் கரையக்கூடிய பிரசியோடைமியம் உப்புகள் வினையில் ஈடுபட்டு பிரசியோடைமியம் ஆக்சலேட்டு உருவாகிறது. பண்புகள்பிரசியோடைமியம் ஆக்சலேட்டு வெளிர் பச்சை நிற படிகங்களை உருவாக்குகிறது. பிரசியோடைமியம் ஆக்சலேட்டு தண்ணீரில் கரையாது. இச்சேர்மம் படிக நீரேற்றுகளை உருவாக்குகிறது. அவை வெளிர் பச்சை படிகங்களாக உள்ளன: எ.கா Pr2(C2O4)3•10H2O. படிக நீரேற்றானது வெப்பமடையும் போது படிப்படியாக சிதைகிறது:[1][2] பயன்கள்பிரசியோடைமியம் தயாரிக்கையில் இச்சேர்மம் ஒர் இடைநிலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சில கண்ணாடிகளுக்கு வண்ணம் பூசவும் இது பயன்படுத்தப்படுகிறது. வேறு சில பொருட்களுடன் இதை கலந்தால், சேர்மமானது கண்ணாடிக்கு அடர் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia