சுக்கூர் மாவட்டம்
சுக்கூர் மாவட்டம் (Sukkur district) (Sindhi: ضلعو سکر), (Urdu: ضِلع سکّھر ), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் சுக்கூர் ஆகும். இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. சுக்கூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 1977-இல் சிகார்பூர் மாவட்டமும், 1993-இல் கோத்கி மாவட்டமும் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் தொடர்பான லெக்கூஞ்சதாரோ எனும் தொல்லியல் மேடு உள்ளது. மாவட்ட நிர்வாகம்
மக்கள்தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 5,216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்கூர் மாவட்டத்தின் மக்கள்தொகை 14,87,903 ஆகும். அதில் ஆண்கள் 7,76,259, பெண்கள் 7,11,587, திருநங்கைகள் 57 ஆகவுள்ளனர். [3][4]மக்கள்தொகையில் 48.398% நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[5] ![]() சுக்கூர் மாவட்டத்தில் 96% இசுலாமியர்களும், 3.28% இந்துக்களும், 0.51% கிறித்தவர்களும், மற்றவர்கள் 0.18% வாழ்கின்றனர். சுக்கூர் மாவட்ட மக்களில் 74.07% சிந்தி மொழியும், 13.82% உருது மொழியும், 6.63% பஞ்சாபி மொழியும், 1.47% பலூச்சி மொழியும், 0.99% சராய்கி மொழியும், பிற மொழி பேசுவோர் 1.49% ஆகவுள்ளனர். மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia