சித்ரால் இராச்சியம்
சித்ரால் இராச்சியம் ('Chitral state) (Urdu: چترال and ریاست چترال) 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.இதன் தலைநகரம் சித்ரால் நகரம் ஆகும். இந்த இராச்சியம் இந்து குஷ் மலையில் 7,708 m (25,289 ft) உயரத்தில் இருந்தது. இது தற்கால பாகித்தான் நாட்டின், ஆப்கானித்தான் எல்லைப்பகுதியில் அமைந்த கைபர் பக்துன்வா மாநிலத்தின் சித்ரால் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். வரலாறு1320-இல் ராயீஸ் வம்சத்தவர்களால் நிறுவப்பட்ட சித்ரால் இராச்சியம், பின்னர் 1571-ஆம் ஆண்டு முதல் கடூர் வம்சத்தவர்களால் ஆளப்பட்டது. 1885-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சித்ரால் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் செயல்பட்டது. சித்ரால் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1969-ஆம் ஆண்டில் சித்திரால் இராச்சியம் மேற்கு பாக்கித்தானில் உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைந்த சித்ரால் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தில் சித்திரால் மாவட்டம் இணைக்கப்பட்ட பின்னர் 2018-ஆம் ஆண்டில் சித்ரால் மாவட்டம் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் கீழ் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்கதோர் வம்ச ஆட்சியாளர்கள்:
வடமேற்கு எல்லைப் பகுதி மன்னராட்சி அரசுகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia