கனிஷ்கரின் தூபி
கனிஷ்கரின் தூபி (Kanishka stupa) (Urdu: کنشک اسٹوپ) குசானப் பேரரசர் கனிஷ்கர் கிபி 150 - 200ல், தற்கால பாக்கிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் பௌத்த தூபியை நிறுவினார். [1][1]13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது. கிபி 300ல் வெள்ளை ஹூணர்களால் இந்நகரம் முற்றுகையிடப்பட்ட போது, இடிக்கப்பட்ட இத்தூபி மீண்டும் கட்டப்பட்டது.[1] கருங்கலில் வடித்த இத்தூபி பண்டைய பௌத்த நினைவுச் சின்னங்களில் புகழ் பெற்றதாகும். சிதைந்த இத்தூபிக்கு அருகில் அகழாய்வு செய்த போது, அழகிய செப்புப் பேழையும், அதனுள் இருந்த மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தனர். அச்செப்புப் பேழைக்கு கனிஷ்கர் பேழை எனப்பெயரிடப்பட்டது. கனிஷ்கர் பேழையில் இருந்த கௌதம புத்தரின் மூன்று உடைந்த எலும்புத்துண்டுகள் , மியான்மர் நாட்டின் மண்டலை நகரத்தின் மண்டலை மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. [2][3] இயற்கைய அழிவுகள்கிபி ஆறாம் நூற்றாண்டின் சீன பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவாங், தமது பயணக் குறிப்பில், இத்தூபி மூன்று முறை இடி தாக்கப்பட்டு, சிதைந்து, மீண்டும் எழுப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். [1] அகழாய்வு1908 - 1909ல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் டேவிட் பிரய்னார்டு ஸ்பூனர் என்பவர் தலைமையில் இத்தூபி அமைந்த இடத்தில் அகழாய்வு செய்த போது, கனிஷ்கர் பேழையும், அதனுள் கௌதம புத்தரின் மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தார். [4] கனிஷ்கர் பேழையிலிருந்த கௌதம புத்தரின் மூன்று எலும்புத்துண்டுகள், மண்டலை நகரத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. [5][3]தற்போது கனிஷ்கர் பேழை, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கனிஷ்கர் தூபியின் தற்போதைய நிலை![]() 175 அடி உயரம் கொண்ட இத்தூபியின் உச்சியை அடைய படிக்கட்டுகளுடன் இருந்தது.[1] [1] [1] [1]தற்போது இத்தூபி முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. இத்தொல்லியல் களம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை. 2011ல் தூபி இருந்த இடத்தை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இத்தூபியின் எஞ்சிய பகுதிகள், பழைய பெஷாவர் நகரத்தின் அகுனாபாத்தில் உள்ளது. [6] இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia