நவாப்ஷா மாவட்டம்
நவாப்ஷா மாவட்டம் (Shaheed Benazirabad District (சிந்தி ضلعو بينظير آباد ), (தற்போதைய இதன் பெயர் சாகித் பெனாசிராபாத் மாவட்டம்[2]), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இதன் தலைமையிட நகரம் நவாப்ஷா ஆகும். இம்மாவட்டத்தில் சன்குதரோ (Chanhudaro) எனுமிடத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களம் உள்ளது. மாவட்ட வரலாறு1912-இல் நிறுவப்பட்ட இம்மாவட்டத்தில் 7 வருவாய் வட்டங்கள் கொண்டிருந்தது. அவைகள்:
1953-இல் சதாத்பூர் மற்றும் சிஞ்ச்ரோ வருவாய் வட்டங்களை புதிதாக நிறுவப்பட்ட சங்கார் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 1989-இல் நௌசெரா பெரோஸ் மற்றும் கண்டியாரோ வட்டங்கள் மற்றும் மொரோ வருவாய் வட்டத்தின் பாதியைக் கொண்டு நௌசரோ பெரோஸ் மாவட்டம் நிறுவப்பட்டது.[3] மாவட்ட நிர்வாகம்தற்போது நவாப்ஷா மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:
மக்கள்தொகை பரம்பல்2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 4502 சகிமீ பரப்பளவு கொண்ட நவாப்ஷா மாவட்ட மொத்த மக்கள்தொகை 16,12,847 ஆகும்.[1] மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 96.3% மற்றும் இந்துக்கள் 2.77% ஆகவுள்ளனர். சிந்தி மொழி 79.25%, உருது 8.72%, பஞ்சாபி மொழி 7.90%, சராய்கி மொழி 1.82% மக்களும் பேசுகின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia