பவநகர் அரசு
![]() ![]() பவநகர் அரசு (Bhavnagar State) பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் சௌராட்டிர தீபகற்ப பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். 7,669 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பவநகர் அரசின் இறுதி மன்னர் பவநகர் அரசை, இந்தியாவுடன் இணைக்க 15 பிப்ரவரி 1948 அன்று ஒப்புதல் அளித்தார்.[1] வரலாறு1194இல் நிறுவப்பட்ட பவநகர் அரசின் துவக்கப் பெயர் செஜக்பூர் ஆகும். பின்னர் 1723இல் இராஜபுத்திர கோகில் குல பவசிங்ஜி என்ற மன்னர் பவநகர் என்ற புதிய நகரை நிறுவிய பின்னர், நாட்டின் பெயர் பவநகர் அரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1807 முதல் பவநகர் அரசு ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தான மன்னர் எனும் அளவில் பவநகர் அரசை ஆண்டனர்.[2] பவநகர் மன்னர்களின் அரண்மனையான நீலம் தோட்டத்து அரண்மனை தற்போது பாரம்பரிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள்கோகில் இராசபுத்திர குலத்தினர் பவநகர் அரசை 1660 முதல் 1947 முடிய ஆண்டனர்.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia