நைதரசனின் பல்வேறு ஒக்சைடு வகைகளுள் நைதரசனீர் ஒக்சைடும் (நைதரசன்+ஈர்+ஒக்சைடு) ஒன்று. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு NO2 ஆகும். நைத்திரிக் அமில உற்பத்தியில் இவ்வாயு இடைவிளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாயுவை இதற்குரிய செங்கபில நிறத்தால் கண்டறியலாம். அறை வெப்பநிலையில் N2O4 வாயுவும் இவ்வாயுவும் இரசாயன சமநிலையில் கலந்து காணப்படுகின்றன. நைதரசனீர் ஒக்சைடு மிகவும் ஆபத்தான நச்சு வாயுவாகும்.
மூலக்கூற்று இயல்புகள்
இதன் மூல் திணிவு கிட்டத்தட்ட 46 ஆகும். இது வளியை விட அடர்த்தி கூடிய வாயுவாகும். இதன் மூலக்கூற்றின் நடுவிலுள்ள நைதரசன் அணுவுக்கும் ஒக்சிசன் அணுவுக்குமிடையே 119.7 pm (பைக்கோ மீற்றர்:10−12 m) தூரமுள்ளது. நைதரசனுக்கும் ஒக்சிசனுக்குமிடையில் ஓசோன் போன்ற ஒற்றை மற்றும் இரட்டைப் பிணைப்புகள் மாறி மாறி வரும் பிணைப்பு வகை உள்ளது.
நைத்திரிக் அமிலத்தை நீரகற்றுவதன் மூலம் இதனை உருவாக்கலாம். நைத்திரிக் அமிலத்தை நீரகற்றும் போது உருவாகும் இரு நைதரசன் பென்டா ஒக்சைடு பின்னர் வெப்பப் பிரிகையடைந்து நைதரசனீர் ஒக்சைடை உருவாக்கும்.:
2 HNO 3 → N 2O 5 + H 2O
2 N 2O 5 → 4 NO 2 + O 2
சில உலோகங்களின் நைத்திரேற்றுக்களைச் சூடாக்குவதாலும் ஆய்வுகூடத்தில் இதனை உருவாக்கலாம். இதன் போது இவை NO 2 ஆக வெப்பப்பிரிகையடைகின்றன.:
2 Pb(NO3)2 → 2 PbO + 4 NO 2 + O 2
செறிந்த நைத்திரிக் அமிலத்தை ஒரு உலோகத்தால் தாழ்த்துவதாலும் நைதரசனீர் ஒக்சைடை உருவாக்கலாம். பொதுவாக ஆய்வுகூடப் பரிசோதனையில் செம்பு பயன்படுத்தப்படுகின்றது:
4 HNO 3 + Cu → Cu(NO3)2 + 2 NO 2 +2 H2O
வெள்ளீயத்தின் மீது செறிந்த நைத்திரிக் அமிலத்தைத் துளித்துளியாகச் சேர்ப்பதனாலும் இவ்வாயுவை உருவாக்கலாம்.
4HNO3 + Sn → H2O + H2SnO3 + 4 NO2
இரசாயன தாக்கங்கள்
இரசாயன சமநிலை
பொதுவாக NO 2 வாயுவுடன் N 2O 4 வாயுவும் கலந்திருக்கும். இவை இரசாயன சமநிலையிலிருப்பதே இதற்குக் காரணமாகும்.:
2 NO 2N 2O 4ΔH = −57.23 kJ/mol
இது ஒரு புறவெப்பத்தாக்கமாகும். வெப்பநிலை அதிகமாக இருந்தால் கலவையில் NO2 வீதம் அதிகமாக இருக்கும். குறைவான வெப்பநிலையில் N2O4 இன் வீதம் அதிகமாகும். NO2 வாயு செங்கபில நிறமானது, ஆனால் N2O4 வாயு நிறமற்றதாகும். எனவே அதிக வெப்பநிலையில் கடுங்கபில நிறமாவதுடன் குறைவான வெப்பநிலையில் வெளிறிய கபில நிறத்தை வாயுக்கலவை அடைகின்றது.
At 150 °C, வெப்பநிலையில் NO 2 வாயு ஒக்சிசனை வெளியேற்றி நைத்திரிக் ஒக்சைட்டாகப் பிரிகையடையும். இத்தாக்கம் அகவெப்பத்தாக்கமென்பதால் தாக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்குத் தொடர்ந்து வெப்பத்தைப் பிரயோகிக்க வேண்டும். (ΔH = 114 kJ/mol):
2 NO 2 → 2 NO + O 2
ஒக்சியேற்றல் தாக்கம்
NO 2வின் பலங்குன்றிய N-O பிணைப்பு காரணமாக இது சிறப்பான ஒக்சியேற்றும் பொருளாக உள்ளது. இதனால் வாயு நிலையிலுள்ள ஐதரோகார்பன்களுடன் வெடிக்கும் வகையில் தாக்கமடையும் இயல்புடையது.
நீரேற்றல் தாக்கம்
இவ்வாயு நீரில் கரைந்தால் நைத்திரிக் அமிலத்தையும், நைத்திரசு அமிலத்தையும் கொடுக்கும். இப்பண்பு காரணமாகவே இவ்வாயு அமில மழையை ஏற்படுத்தும் வாயுக்களில் ஒன்றாக உள்ளது.:
2 NO 2/N 2O 4 + H 2O →HNO 2 + HNO 3
உருவாக்கப்படும் நைத்திரிக் அமிலம் பின்னர் மெதுமெதுவாக மீண்டும் நைதரசனீர் ஒக்சைடாக மாறும். இதனாலேயே அய்வுகூடங்களில் நைத்திரிக் அமில மாதிரியில் ஒரு கபில நிறச் சாயல் தென்படுகின்றது.:
4 HNO 3 → 4 NO 2 + 2 H 2O + O 2
நைத்திரேற்றுக்களின் தொகுப்பு
உலோக ஒக்சைடுகளுடன் NO 2 தாக்கமடைந்து உலோக நைத்திரேற்று உருவாகின்றது. இத்தாக்கச் சமன்பாட்டில் M என்பது உலோகத்தைக் குறிக்கின்றது.
MO + 3 NO 2 → 2 M(NO 3) 2 + NO
அல்கைல்களுடனும் உலோக ஹேலைட்டுகளுடனும் தாக்கமடைந்து உரிய நைத்திரைட்டு உருவாகின்றது:
2 CH 3I + 2 NO 2 → 2 CH 3NO 2 + I 2
TiI 4 + 4 NO 2 → Ti(NO 2) 4 + 2 I 2
மேற்கோள்கள்
↑"nitrogen dioxide (CHEBI:33101)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute. 13 January 2008. Main. Archived from the original on 4 மார்ச்சு 2016. Retrieved 4 October 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)