இருசோடியம் பாசுபேட்டு
இருசோடியம் பாசுபேட்டு (Disodium phosphate) என்பது Na2HPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலவகையான சோடியம் பாசுபேட்டுகளுள் ஒன்றான இச்சேர்மம் சோடியம் ஐதரசன் பாசுபேட்டு என்றும் ஆங்கிலத்தில் சுருக்கமாக DSP என்றும் அழைக்கப்படுகிறது. நீரிலி வடிவ உப்பாகவும் அதே சமயத்தில் 2,7,8 மற்றும் 12 வடிவ நீரேற்றுகளாகவும் இவ்வுப்பு காணப்படுகிறது. நீரிலி வடிவ உப்பு நீருறிஞ்சும் திறனுடனும் [1] நீரேற்று உப்புகள் யாவும் தண்ணீரில் கரையக் கூடியனவாகவும் உள்ளன. அமிலக்காரப் பண்புகள்இரு சோடியம் ஐதரசன் பாசுபேட் நீர்க்கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) 8.0 மற்றும் 11.0 அளவுகளுக்கு இடையில் இருப்பதால் இது ஒரு மிதமான காரமாக கருதப்படுகிறது.
தயாரிப்பு மற்றும் வினைகள்பாசுபாரிக் அமிலத்துடன் சோடியம் ஐதராக்சைடு சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இரு சோடியம் பாசுபேட்டு தயாரிக்கலாம்.
தொழிற்சாலைகளில் இது இரண்டு படிநிலைச் செயல்முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் இருகால்சியம் பாசுபேட்டுடன் சோடியம் பைசல்பேட்டு சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. இங்கு கால்சியம் சல்பேட்டு வீழ்படிவாக உருவாகிறது.[2]
வினையில் உருவாகும் ஒருசோடியம் பாசுபேட்டு கரைசல் இரண்டாவது படிநிலையில் பகுதியாக நடுநிலையாக்கப்படுகிறது.
பயன்கள்உணவு மற்றும் தண்ணீர் சிகிச்சையில் இருசோடியம் பாசுபேட்டுடன் முச்சோடியம் பாசுபேட்டு இணைத்து பயன்படுத்தப்படுகிறது. உணவுகளில், காரகாடித்தன்மைச் சுட்டெண்ணை (pH) சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. செறிவூட்டப்பட்ட பால் தயாரிப்பில் உறைதலை தடுக்க இதன் இருப்பு பயன்படுகிறது. தூளாக்கப்பட்ட உணவுக் கூட்டுப் பொருட்கள் உறைதலையும் [3], நீர் தூய்மையாக்கலின் போது கால்சியம் செதில்கள் உருவாவதையும் இவ்வுப்பு ஒடுக்குகிறது. சிலவகையான தூய்மையாக்கிகளிலும் இது காணப்படுகிறது[2]. திண்மநிலையில் உள்ள இருசோடியம் பாசுபேட்டை சூடுபடுத்துவதால் நான்கு சோடியம் பைரோபாசுபேட்டு என்ற சேர்மம் கிடைக்கிறது.
மலச்சிக்கல் சிகிச்சையில் அல்லது முன்குடல் சுத்தம் செய்ய, ஒருகார மற்றும் இருகார சோடியம் பாசுபேட்டுகள் மலமிளக்கியாக பயன்படுத்தப்படுகின்றன.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia