கரைதுறைப்பற்று பிரதேச சபை

கரைதுறைப்பற்று பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
சின்னராசா லோகேசுவரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி
26 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
யோகேஸ்வரன் அனோஜன், ஐக்கிய மக்கள் சக்தி
26 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்21
அரசியல் குழுக்கள்
அரசு (7)

எதிர் (14)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025
வலைத்தளம்
கரைதுறைப்பற்று பிரதேச சபை

கரைதுறைப்பற்று பிரதேச சபை (Karaithurai Patru Divisional Council) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 13 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]

  1. கரிக்கட்டுமுளை வடக்கு
  2. வற்றாப்பளை
  3. முல்லைநகரம்
  4. ஹிஜ்ராபுரம்
  5. முள்ளியவளை மேற்கு
  6. முள்ளியவளை கிழக்கு
  7. தண்ணீரூற்று
  8. கணுக்கேணி
  9. முல்லையூர்
  10. கரிக்கட்டுமுளை கிழக்கு
  11. குமுளமுனை
  12. கரிக்கட்டுமுளை தெற்கு
  13. வெலிஓயா கிழக்கு

தேர்தல் முடிவுகள்

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு* 6,292 30.11% 9 0 9
  ஐக்கிய தேசியக் கட்சி 2,833 13.56% 0 3 3
  சுயேச்சைக் குழு 2,636 12.61% 1 2 3
  இலங்கை பொதுசன முன்னணி 2,067 9.89% 1 1 2
  தமிழர் விடுதலைக் கூட்டணி 1,819 8.71% 1 1 2
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,686 8.07% 0 2 2
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 1,235 5.91% 0 1 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 985 4.71% 0 1 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 962 4.60% 0 1 1
தேசிய மக்கள் கட்சி 246 1.18% 0 0 0
  மக்கள் விடுதலை முன்னணி 125 0.65% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 20,896 100.00% 12 12 24
செல்லாத வாக்குகள் 370
செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் 21,266
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,773
வாக்குவீதம் 79.43%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2025 தேர்தலில் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் தலைவராக கனகையா தவராசா (தண்ணீரூற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக திருச்செல்வம் இரவீந்திரன் (வற்றாப்பளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4] 13 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 6,306 31.50% 6 1 7
  தேசிய மக்கள் சக்தி 4,407 22.01% 2 3 5
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3,672 18.34% 3 1 4
  ஐக்கிய மக்கள் சக்தி 1,962 9.80% 1 1 2
  சுயேச்சைக் குழு 2 1,392 6.95% 1 0 1
இலங்கைத் தொழிற் கட்சி 624 3.12% 0 1 1
  சுயேச்சைக் குழு 1 465 2.32% 0 0 0
  இலங்கை பொதுசன முன்னணி 329 1.64% 0 0 0
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 317 1.58% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 20,022 100.00% 13 8 21
செல்லாத வாக்குகள் 294
செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் 20,316
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31.574
வாக்குவீதம் 64.34%

2025 தேர்தலில் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் தலைவராக சின்னராசா லோகேசுவரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக யோகேசுவரன் அனோஜன் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Local Authorities Election - 6.05.2025 Mullaitivu District Maritime Patru Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 4 June 2025. Retrieved 4 June 2025.
  5. "கரைதுறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்". வணக்கம் லண்டன். Archived from the original on 1 சூலை 2025. Retrieved 1 சூலை 2025.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya