பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு(IV)

பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV)
Potassium hexachloropalladate (IV)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபொட்டாசியம்; எக்சாகுளோரோபலேடியம் (2-)
வேறு பெயர்கள்
இருபொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (2-)
இனங்காட்டிகள்
16919-73-6 N
ChEBI CHEBI:231511
ChemSpider 55724
EC number 240-974-6
InChI
  • InChI=1S/6ClH.2K.Pd/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: OEDRXJBJMMJUSV-UHFFFAOYSA-H
பப்கெம் 61852
பண்புகள்
Cl6K2Pd
வாய்ப்பாட்டு எடை 397.32 g·mol−1
தோற்றம் செம்பழுப்பு படிகங்கள்
அடர்த்தி 2.74 கி/செ.மீ3
உருகுநிலை 525°செல்சியசு
குறைவாகக் கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H319
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) (Potassium hexachloropalladate (IV)) என்பது K2[PdCl6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[2][3]

தயாரிப்பு

இராச திராவகத்தில் பொட்டாசியம் டெட்ராகுளோரோபல்லேடேட்டு (II) சேர்மத்தை கரைத்தால் பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) உருவாகும்.

3K2[PdCl4] + 6HCl + 2HNO3 -> 3K2[PdCl6] + 2NO + 4H2O

பொட்டாசியம் குளோரைடு கரைசலில் உள்ள பொட்டாசியம் டெட்ராகுளோரோபலேடேட்டு (II) சேர்மத்தின் வழியாகக் குளோரினைச் செலுத்தினால் பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) உருவாகும்.[4]

இயற்பியல் பண்புகள்

பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு(IV) சேர்மம் கனசதுரப் படிக அமைப்பில் செம்பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[5] இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவே கரையும்.

வேதிப் பண்புகள்

சூடுபடுத்தும் போது அல்லது சூடான செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலுடன் சேர்க்கும் போது பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு(IV) சிதைவடைகிறது.

K2[PdCl6] -> K2[PdCl4] + Cl2

பயன்கள்

புகைப்படத் தொழிலிலும்,[6] கரிம வேதியியல் வினைக்காரணியாகவும், மருந்து இடைநிலைப் பொருளாகவும் பொட்டாசியம் எக்சாகுளோரோபலேடேட்டு (IV) பயன்படுத்தப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

  1. "Potassium hexachloropalladate(IV)". Sigma Aldrich. Retrieved 13 March 2025.
  2. "Potassium Hexachloropalladate(IV) | AMERICAN ELEMENTS®". American Elements. Retrieved 13 March 2025.
  3. "SAFETY DATA SHEET". Thermo Fisher. Retrieved 13 March 2025.
  4. Griffith, William P.; Robinson, Stephen D.; Swars, Kurt; Griffith, William P.; Swars, Kurt (1989). Pd Palladium: Palladium Compounds (8th Edition / Achte, völligneubearbeiteteAuflage ed.). Berlin Heidelberg: Springer. p. 151. ISBN 978-3-662-09190-6.
  5. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. C-252. Retrieved 13 March 2025.
  6. Turkington, Robert (26 October 2009). Chemicals Used for Illegal Purposes (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 186. ISBN 978-0-470-18780-7. Retrieved 13 March 2025.
  7. "Potassium hexachloropalladate(IV), Pd 26.3% min, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. Retrieved 13 March 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya