பொட்டாசியம் சிலிக்கேட்டு
பொட்டாசியம் சிலிக்கேட்டு (Potassium silicate) என்பது K2SiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரின் அளவுக்கு ஏற்ப இச்சிலிக்கேட்டின் மாதிரிகள் மாறுபடுகின்றன. பொதுவாக இவை வெண்மை நிறத்தில் திண்மங்களாகவோ அல்லது நிறமற்ற கரைசலாகவோ காணப்படுகின்றன[1]. தயாரிப்பு, அமைப்பு, வினைகள்சிலிக்காவுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்துவதால் பொட்டாசியம் சிலிக்கேட்டு தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது. nSio2 + 2KOH --> K2O + nSiO2 + H2O இக்கரைசல்கள் அதிக காரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இவற்றுடன் அமிலங்களைச் சேர்த்தால் சிலிக்கா மீண்டும் உருவாகிறது. ஒன்றுடன் ஒன்று உள்ளிணைப்புப் பெற்ற SiO3]]2- ஒருபடிகளால் ஆன சங்கிலி அல்லது வட்ட அமைப்பை பொட்டாசியம் சிலிக்கேட்டு பெற்றுள்ளது. ஒவ்வொரு Si அணுவும் நான்முக வடிவில் காணப்படுகின்றன. பயன்கள்மரச்சாமான்கள் பாதுகாப்புபொட்டாசியம் சிலிக்கேட்டு கரைசலைக் கொண்டு மரப்பலகையை செறிவூட்டுவதன் மூலம் வீடுகளில் உள்ள மரவேலை பொருட்கள் எளிதில் தீப்பற்றுவதை தடுக்க முடியும். முதலில் மரச்சாமான்கள் பொட்டாசியம் சிலிக்கேட்டின், கிட்டத்தட்ட நடுநிலையான நீர்த்த கரைசலால் செறிவூட்டப்படுகின்றன. இக்கரைசல் உலர்ந்த பின்னார் ஒன்று அல்லது இரு முறை அடர் பொட்டாசியம் சிலிக்கேட்டு கரைசல் பூசப்படுகிறது[2] தோட்டக்கலையில் பயன்பொட்டாசியம் மற்றும் சிலிக்கன் தனிமங்களின் கரையக்கூடிய மூலமாக தோட்டக்கலையில் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சி ஊடகத்தை இச்சிலிக்கேட்டு மேலும் காரத்தன்மை உடையதாக்குகிறது. வழக்கமாக பயன்படுத்துடன் உரத்துடன் ஒரு இணைப்பாகவும் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிலிக்கன் சேர்மங்களால் கிடைக்கும் எண்ணற்ற பயன்கள் விளைகின்றன. சிலிக்கன் சேர்மங்கள் தாவரங்களுக்கு இன்றியமையாதனவாகவும் ஆதரவாகவும் இருக்கின்றன. தண்டுகளை கெட்டியாக்குதல். வறட்சியைத் தாங்கும் இயல்பை செடிகளுக்கு அளித்தல், பயிர்கள் வாடுவதை தடுத்து நிறுத்தல், பெரிய இலைகளும் பழங்களும் வளர உதவுதல் முதலான பல பலன்கள் சிலிக்கன் சேர்மங்களால் தாவரங்களுக்குக் கிடைக்கின்றன. தொழிற்துறை பயன்கள்உலோகங்களைத் தூய்மைப்படுத்தும் சில உருவாக்கங்களில் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுகிறது. தவிர அரிமாணத்தை தடுக்கும் வேதிப்பொருளாகவும் பயனாகிறது[3]. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பற்ற வைக்கும் கம்பிகளை வனைதலிலும் இச்சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்புபொட்டாசியம் சிலிக்கேட்டு ஒரு வலிமையான காரமாக இருப்பதால் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia