பொட்டாசியம் பார்மேட்டு
பொட்டாசியம் பார்மேட்டு (Potassium formate) CHKO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பார்மிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வலிமையான நீருறிஞ்சும் சேர்மமான பொட்டாசியம் பார்மேட்டு வெள்ளை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[2] பொட்டாசியம் உற்பத்தியின் போது பார்மேட்டு பொட்டாசு செயல்முறையில் ஓர் இடைநிலை சேர்மமாக இது உருவாகிறது.[3] சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பனிநீக்க உப்பாகவும் பொட்டாசியம் பார்மேட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[4][5] குறைந்த அளவு அரிக்கும் திரவ உலர்த்தியிலும் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.[6] பொட்டாசியம் பார்மேட்டின் 52% கரைசல் −60 °செல்சியசு (−76 °பாரங்கீட்டு) உறைநிலைப் புள்ளியைக் கொண்டுள்ளது.[7] பல திரவ குளிரூட்டிகளை விட, குறிப்பாக துத்தநாகம் மற்றும் அலுமினியம், பொட்டாசியம் பார்மேட்டு உப்புநீரானது சில சமயங்களில் வெப்பப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பல எஃகுகளிடம் இவை அரிக்கும் தன்மையுடன் இருந்தாலும், சில அளவுகளில் அலுமினியம் மற்றும் எஃகுகளுடன் இணக்கமாக உள்ளன.[8][9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia