ராமேசியம் மன்னர்கள் பட்டியல்ராமேசியம் மன்னர்கள் பட்டியல், பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் இரண்டாம் ராமேசேசின் நினைவுக் கோயிலின் சுவரில் குறுங்கல்வெட்டுகளில் எகிப்தின் 18-ஆம் வம்சம் மற்றும் 19-ஆம் வம்ச மன்னர்களின் பெயர்ப் பட்டியல் மட்டுமே செதுக்கப்பட்டுள்ளது. இந்த மன்னர்களின் பட்டியலை முதலில் கண்டறிந்து 1845-ஆம் ஆண்டில் வெளியிட்டவர் ஜீன்-பிராகோய்ஸ் சாம்போலியன் ஆவார்.[1] பின்னர் 1849-ம் ஆண்டில் இந்த மன்னர்களின் பட்டியலை மறுசீரமைத்தவர் கார்ல் ரிச்சர்டு லெப்சியஸ் ஆவார்.[2] இப்பட்டியலில் 19 குறுங்கல்வெட்டுகளில் 14 பார்வோன்களின் பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அமர்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்களின் பட்டியல் விடுபட்டுள்ளது. ![]() பட்டியலில் உள்ள மன்னர்கள் பெயர்ராமேசியம் நினைவுக் கோயில் சுவரில் இரண்டு வரிசையில் 14 குறுங்கல்வெட்டுகளில் 14 பார்வோன்களின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது. மேல் வரிசையில் 5 பார்வோன்களின் பெயரும், கீழ் வரிசையில் 9 பார்வோன்களின் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சுவரில் இரண்டு காட்சிகள் உள்ளது. இடப்புற காட்சியில் 14 பார்வோன்களின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போன்றும், வலதுபுறத்தில் 5 பார்வோன்களின் சிலைகளை ஊர்வலத்தில் எடுத்துச் செல்வது போன்று சித்திரம் வரையப்பட்டுள்ளது.
இதனுடன் மூன்றாம் ராமேசேசின் மெடிநெத் அபு மன்ன்னர்கள் பட்டியலை ஒப்பிடும் போது வடிவத்தில் ஒன்றாக உள்ளது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia