மூன்றாம் ராமேசஸ்
மூன்றாம் ராமசேஸ் (Ramesses III) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1186 முதல் கிமு 1155 முடிய 31 ஆண்டுகள் ஆண்டார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் முடிவில் எகிப்து இராச்சியம் பொருளாதாரம் மற்றும் இராணுவம் வலு இழந்து காணப்பட்டது. [1][2] மெடிநெத் அபு பகுதியில் மெடிநெத் அபு கோயில் கட்டி, புது இராச்சியத்தின் 9 மன்னர்கள் பெயர்கள் கொண்ட மெடிநெத் மன்னர்கள் பட்டியலை கல்வெட்டில் வடித்தார். 18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர். ![]() ![]() பார்வோன்களின் அணிவகுப்பு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மூன்றாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [3][3] படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia