அகோலா மாவட்டம்
அகோலா மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ளது.[1] இதன் தலைமையகத்தை அகோலாவில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டத்தை அமராவதி கோட்டத்திற்கு உட்படுத்தி நிர்வகிக்கின்றனர். இது 5,431 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தட்பவெப்பம்
மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,818,617 மக்கள் வசித்தனர். [2] இந்த மாவட்டத்தில் சதுரகிலோமீட்டருக்குள் 321 பேர் வாழும் அளவுக்கு மக்கள் நெருக்கடி இருக்கிறது. [2]பால் விகித அளவில், ஆயிரம் ஆண்களுக்கு 942 பெண்கள் நிகராக இருக்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 87.55% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தில் ஏழு வட்டங்கள் உள்ளன.[1]
போக்குவரத்துஇங்கு ரயில் வசதி உள்ளது. பாராஸ், கைகோன், அகோலா, முர்திஜாபூர் ரயில் நிலையங்களின் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில்களில் பயணிக்கலாம். மீட்டர் கேஜில் இயங்கக் கூடிய சில ரயில் நிலையங்களும் உள்ளன. பொருளாதாரம்பருத்தியை அதிக அளவில் பயிரிடுகின்றனர். இங்கு எண்ணெய் ஆலைகளும் உள்ளன. சிலர் சோயாபீன் செடிகளையும் பயிரிட்டுள்ளனர். இணைப்புகள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia