அகல்யாநகர் மாவட்டம்
அகல்யாநகர் மாவட்டம் (பழைய பெயர்:அகமது நகர் மாவட்டம், மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் தலைமையகம் அகல்யாநகரில் உள்ளது. இந்த மாவட்டம், நாசிக் கோட்டத்திற்கு உட்பட்டது. அகல்யாநகர் மாவட்டத்தில் புகழ் பெற்ற சீரடி நகரம், சித்தி விநாயகர் கோயில், அஷ்ட விநாயகர் கோயில், சனி சிங்கனாப்பூர் கோயில் மற்றும் சாய்பாபா கோயில்கள் உள்ளது. இங்கு சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து முன்னேறியுள்ள ராலேகாண் சித்தி எனப்படும் ஊர் உள்ளது.[2] பெயர் மாற்றம்இம்மாவட்ட ப் பகுதியை ஆட்சி செய்த மராத்திய அரசி, அகல்யாபாய் நினைவாக மகாராட்டிரா மாநிலத்தை ஆளும் மகா யுதி கூட்டணி அரசின் முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, அகமத்நகர் நகரம் மற்றும் அகமத்நகர் மாவட்டத்தின் பெயரை அகல்யாநகர் மாவட்டம் என்றும், தலைமையிடமான அகமத்நகர் என்பதை அகல்யாநகர் என்றும் பெயர் மாற்ற செய்ய இந்திய அரசிடம் மே 2023ல் கோரிக்கை வைத்தார்.[3] மகாராட்டிரா முதலமைச்சரின் கோரிக்கையை இந்திய அரசு அக்டோபர் 2024ல் ஏற்றது.[4][5][6] பொருளாதாரம்இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[7] ஆட்சிப் பிரிவுகள்இந்த மாவட்டத்தை 7 கோட்டங்களாகவும் 14 வருவாய் வட்டங்களாகவும் பிரித்துள்ளனர்.[8] அவை:
சட்டமன்ற & நாடாளுமன்றத் தொகுதிகள்
மக்களவைத் தொகுதிகள்: மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 4,543,083 மக்கள் வாழ்ந்தனர்.[9] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 266 பேர் வாழ்கின்றனர்.[9] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 934 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[9] இங்கு வசிப்போரில் 80.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[9] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia