அங்குலிமாலா

புத்தரைத் துரத்தும் அங்குலிமாலன்

அங்குலிமாலன் (angulimala) (தாய்: องคุลิมาล) என்பவன் பீகாரில் புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு கொடிய திருடன். இவன் காட்டு வழியில் செல்வோரைக் கொள்ளையடித்து அவர்களின் விரலை வெட்டியெடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டதால் அங்குலி மாலா எனும் பெயர் பெற்றான். இவன் பிறப்பால் அஹிம்சகன் எனும் பெயருடைய பிராமணனென்றும் இவனது குரு சதியெண்ணத்துடன் ஆயிரம் பேரின் விரல்களை தட்சணையாகக் ‌கேட்க இவன் வாழ்க்கை தடம் புரண்டு இந்நிலையுற்றதாய்ச் சொல்லப்படுகிறது.[1]

ததாகதருடன் சந்திப்பு

999 பேரைக் கொன்று விரல்களை எடுத்திருந்த அங்குலிமாலா ஆயிரமாவது ஆளுக்காகக் காத்திருந்த வேளையில், அவன் இருக்கக் கூடிய காட்டுப் பகுதியிலே செல்ல ததாகதர் முயன்ற போது அவரின் சீடர்கள் அவரைத் தடுத்தனர். அவர்களுக்குச் செவி கொடுக்காத ததாகதர் அவ்வழியிலேயே தனித்துப் பயணமானார். அங்குலிமாலன் அவரெதிரிலே வந்தான். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பலவாறாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் புத்தர் அவனை மனமாற்றமடையச் செய்து புத்தச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.

துறவி அங்குலிமாலாவை மன்னர் பசேநதி காணல்

அங்குலிமாலாவின் தலைக்கு விலை வைத்த கோசல நாட்டின் மன்னர் பசேநதி புத்தரைக் காண வந்த போது, புத்தர் அவருக்கு அங்கே துறவியாய் இருந்த அங்குலிமாலாவை அறிமுகம் செய்து வைத்தார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

துறவி அங்குலிமாலா வெளியே சென்ற போது யாரும் அவருக்கு உணவளிக்க முன்வரவில்லை. அவரைக் கல்லால் அடித்து தலையில் குருதி ஒழுகும் படி செய்தனர். இறுதியில் ஒரு நாள் மாடு ஒன்று முட்டி துறவி அங்குலிமாலா மரணமடைந்தார். அங்குலிமாலாவின் முடிவுக்கதை மனிதர்கள் தங்கள் கருமவினையிலிருந்து எவ்வேளையிலும் எவ்வழியிலும் தப்ப முடியாது என்பதை விளக்குவதாய் அமைகிறது.

மேற்கோள்கள்

  1. Angulimala

உசாத்துணை

வெளியிணைப்புகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya