திரிபிடகம்திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும்.[1]. பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவையாகும். இந்த மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் என்று கருதப்படுபவை.
மூன்று வகைகள்சுத்தபிடகம்இது முதன்மையாக புத்தரின் போதனைகளையும், தத்துவங்களையும், நேரடியாக பாளி மொழியில் கொண்டுள்ளது. ஞான போதனைகள் மூலம் ஒருவரின் உள்ளொளொளியை அல்லது ஆத்ம விமோசனத்தை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது. இதனை தொகுத்தவர் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான அன்பில் முதிர்ந்த துறவியான ஆனந்தர் ஆவார். அபிதம்மபிடகம்பௌத்த மெய்யியல் தத்துவங்களைக் கொண்டதாக இது அமைகின்றது. இதனை தொகுத்தவர் மகாகாசியபர் ஆவார். விநயபிடகம்தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பிரமாணங்கள் இதில் விவரிக்கப்படுகின்றது. இதனை தொகுத்தவர் உபாலி ஆவார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia