விசாகா
![]() விசாகா (Viśākhā), கௌதம புத்தரின் நேரடி பெண் சீடர்களில் ஒருவர். தியான யோகங்களில் வல்லவர். தனது 120-வது வயதில் மறைந்தவர். இவரது எலும்பு மற்றும் சாம்பல் வைத்து சிராவஸ்தி நகரத்தில் ஸ்தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது. வரலாறுமிகாரமாதா என்றும் அழைக்கப்படும் விசாகை, கௌதம புத்தரின் காலத்தில் வாழ்ந்த ஒரு பணக்கார பிரபுத்துவப் பெண்மணி. அவர் கௌதம புத்தரின் தலைமைப் பெண் பிக்குணியாக இருந்தார். விசாகா மிகாரமாதுபாசாதா ("மிகரமாதாவின் அரண்மனை" என்று பொருள்) என்ற பௌத்த மடாலயத்தை சிராவஸ்தியில் நிறுவினார், இது புத்தரின் காலத்தில் இரண்டு மிக முக்கியமான கோயில்களில் ஒன்றாகக் கருதப்பட்டது, மற்றொன்று ஜேதவனம் மடாலயம் ஆகும். மகத இராச்சியத்தில் முக்கிய ஒரு பணக்கார குடும்பத்தில் விசாகா பிறந்தார். ஏழு வயதில் கௌதமபுத்தரை சிராவஸ்தி நகரத்தில் சந்தித்தார். கௌதம புத்தரின் பிரசங்கத்தைக் கேட்ட பிறகு சோதபண்ணா[1] என்ற ஞான நிலையை அடைந்தார். விசாகாவும் அவரது குடும்பத்தினரும் பின்னர் கோசல இராச்சியத்தில் உள்ள சாகேதம் (இன்றைய அயோத்தி) நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். விசாகா தனது பதினாறு வயதில் பூர்ணவர்த்தனனை மணந்தார். பின்னர் தனது குடும்பத்துடன் வாழ சிராவஸ்திக்கு குடிபெயர்ந்தார். மிகாரா என்ற செல்வந்த தனது மாமனாரை புத்த மதத்திற்கு மாற்றியதன் மூலம் விசாகா பிரபலமடைந்தார். இதனால் விசாகாவுக்கு மிகாராமாதா என்ற சிறப்புப் பெயரை கௌதம புத்தர் வழங்கினார். இதன் பொருள் "மிகாராவின் தாய் " என்பதாகும்..[2][3]|name=|group=note}} பிக்குணிகளின் தலைமைப் புரவலராக விளங்கிய விசாகா, தனது வாழ்நாள் முழுவதும் கௌதம புத்தரையும், பிக்குகளையும் ஆதரித்தார், மேலும் கௌதம புத்தர் பொதுமக்களுடன் பழகுவதில் அவரது முதன்மை உதவியாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். தாராள மனப்பான்மையில் முதன்மையான புத்தரின் பெண் சீடராக அவர் அறியப்படுகிறார். விசாகா, ஆண் பிக்குவான அனாதபிண்டிகனுடன் இணைந்து கௌதம புத்தரின் மிகப்பெரிய புரவலராகவும், நன்மை செய்பவராகவும் இருந்தார். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia