சௌத்திராந்திகம்

சௌத்திராந்திகம் ஈனயான பௌத்த சமயத்திலிருந்து பிரிந்த இரண்டு முதன்மைப் பிரிவுகளில் ஒன்று. மற்றொன்று வைபாடிகம் ஆகும். இப்பிரிவை உருவாக்கியவர் குமாரலப்தர் ஆவார். குமாரலப்தர் நாகார்ஜுனர் காலத்தவர். பிடக சூத்திரத்தைப் பின்பற்றியதால் சௌத்திராந்திகர் எனப்பெயர் பெற்றனர். புலால் உண்ண தலைப்பட்ட பௌத்தப் பிரிவினர் சௌத்திராந்திகர்கள் என்பதை சிவஞான சித்தியாரின் பரபக்கத்தாலும் அறியலாம்.

தத்துவம்

இவர்கள் காட்சிப் பொருள் உண்மைவாதிகள் (Realists). பொருட்கள் யாவும் கணத் தன்மையின; எனினும் தொடர்ந்தும் விரைந்தும் சுழன்று கொண்டிருப்பதால் கணத்தன்மை (நொடிப் பொழுது-க்ஷணநேரம்) என்ற எண்ணம் எழுவதில்லை. எல்லாப் பொருள்களும் கணப்பொழுதுடைய தர்மங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. கணத்தன்மை மட்டுமே உண்மை யத்சத்தத் க்ஷணிகம் என்பதே சௌத்திராந்திகர்களின் முடிவான சித்தாந்தம் ஆகும். இதனால் சௌத்திராந்திகர்களை ஆதிசங்கரர் க்ஷணிக விஞ்ஞானவாதிகள் என அழைத்தார். தற்போது இப்பிரிவை பின்பற்றும் பௌத்தர்கள் எவருமில்லை.

இதனையும் காண்க

உசாத்துணை

இந்தியத் தத்தவக் களஞ்சியம், தொகுதி - 1, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya