கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள்![]() கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள் (Relics associated with Buddha), தற்கால இந்தியாவின் குசிநகரத்தில் கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் அவரது பூத உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளை 8 கண இராச்சியங்களின் தலைவர்கள் பங்கிட்டுக் கொண்டதாக மகாபரிநிப்பான சூக்தம் எனும் பௌத்த நூல் கூறுகிறது. நினைவுச் சின்னங்களின் பகுதிகள்![]() இறந்த கௌதம புத்தரின் உடலை குசி நகரத்தில் எரியூட்டினாலும், கௌதம புத்தர் பிறந்த சாக்கிய குலத்தவர்களுக்கே முதலில் புத்தரின் அஸ்தி அனுப்பி வைக்கப்பட்டது. மகத மன்னர் அஜாதசத்துரு உள்ளிட்ட கண இராச்சியங்களின் தலைவர்கள் புத்தரின் அஸ்திக்கு உரிமை கோரியதால், அனைத்து கண சங்கத் தலைவர்களுக்கும் புத்தரின் அஸ்தியை எட்டு பங்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.[1] எஞ்சிய ஒரு பகுதி அஸ்தியை பிப்லிவனத்தை ஆண்ட மௌரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. [2]கௌதம புத்தர் அஸ்தியைப் பெற்றுக் கொண்ட தலைவர்கள், தங்கள் ஊர்களில் அஸ்தியின் மீது தூபிகள் எழுப்பி கௌதம புத்தரை நினைவு கூர்ந்தனர். குசிநகர், பிப்ரவா, இராமகிராமம் மற்றும் வைசாலி, அகழாய்வில் கௌதம புத்தரின் அஸ்தி வைத்து எழுப்பிய தூபிகள் கண்டறியப்பட்டது. [3][4] புத்தகோசர் கூற்றுப்படி, புத்தரின் அஸ்தியின் ஒரு சிறு பகுதி, பெசாவர் நகரத்திற்கு அருகில் கனிஷ்கர் பேழையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அசோகரால் பரவிய புத்தரின் அஸ்திகள்மகத மன்னர் அஜாதசத்துரு, புத்தரின் அஸ்தி மீது எழுப்பிய தூபிகளிலிருந்து, அசோகர் (கிமு-304 – 232) புத்தரின் அஸ்தியின் ஒரு பகுதியைத் தோண்டி எடுத்து மௌரியப் பேரரசு பகுதிகளில் புத்தரின் அஸ்திகளின் பகுதிகள் மீது ஆயிரக்கணக்கான தூபிகளை எழுப்பினார்..[5][6][note 1] கிபி 5 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பௌத்த அறிஞர்களான பாசியான் மற்றும் யுவான் சுவாங் தமது பயணக் குறிப்புகளில் புத்தரின் அஸ்தி மீது நிறுவப்பட்ட தூபிகள் சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறுகின்றனர்.[7] கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்கள்![]()
![]() குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia