அசாஜி
அசாஜி அல்லது அஸ்வஜித் (Assaji), கயையில் கௌதம புத்தருடன் தவமிருந்த ஐந்து முனிவர்களில் ஒருவர். கௌந்தேயன் போன்று இவரும் பின்னாட்களில் புத்தரின் சீடராகி அருகத நிலைக்கு உயர்ந்தவர். புத்தரின் முதன்மைச் சீடர்களாக விளங்கிய சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியவர்களை, புத்தரின் சீடர்களாக மாற்றியதில் அசாஜிக்கு பெரும் பங்கு உண்டு. கிமு 6ம் நூற்றாண்டில் தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஆவ பின்னணிகபிலவஸ்துவில் அந்தணர் குலத்தில் பிறந்த அசாஜியின் தந்தை, கபிலவஸ்துவின் சாக்கிய குல மன்னர் சுத்தோதனரின் அரண்மனையில் பணியாற்றியவர். புத்தரின் பிறந்தவுடன், அவரது வருங்காலத்தை கணித்த எட்டு அறிஞர்களில் கௌந்தேயன் மற்றும் அசாஜியின் தந்தையும் ஒருவராவர். கௌதம புத்தர் அரண்மனையை விட்டு, துறவறம் மேற்கொண்டு கயையில் கடும் தவம் நோற்ற போது, புத்தருடன் தவத்தில் இருந்த நால்வரில் அசாஜி, பாட்டியா, மகாநாமா மற்றும் கௌந்தேயனும் அடங்குவர். [1][2][3] ஒரு முறை புத்தர் உடலை வருத்தி நீர் அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து கடும் தவம் நோற்பதை விட்டு விட்டு, நீர் குடித்து, உணவு உண்ணத் தொடாங்கினார். கடும் தவத்தை கைவிட்டு, சித்தாத்தரின் இந்த நடத்தையைக் கண்ட அசாஜி மற்றும் கௌந்தேயன் உள்ளிட்ட நான்கு அந்தண ரிஷிகள், அவரை அவமதித்தி, அவரை விட்டு அகன்று சாரநாத்திற்குச் சென்று கடும் தவத்தை தொடங்கினர். பின்பு புத்தர் ஞானம் அடைந்தவுடன், வீடு பேறு அடைவதற்கு கடும் தவ, விரதங்களை கடைப்பிடிப்பதை விட எளிய வழியை கண்டறிந்தார். அதுவே நடு வழி ஆகும். நடு வழி நெறி மூலம் அனைவரிடத்தில் அன்பு, கருணை செலுத்துவதன் மூலம் கருமத் தளைகளிலிருந்து விடுதலை பெறலாம் உபதேசித்தார். அருகத நிலை அடைதல்கயையில் ஞானம் அடைந்த புத்தர், தமது நடு வழி மார்க்கம் குறித்து, தம்முடன் கயையில் தவமியற்றிய நான்கு முனிவர்களுக்கு முதலில் உபதேசிக்க நினைத்தார். எனவே சாரநாத்தில் தங்கி தவமிருக்கும் அசாஜி, கௌந்தேயன் உள்ளிட்ட ஐவரையும் கண்டு, தனது நடு வழி தத்துவங்களை போதித்தார். பின்னர் அசாஜி அருகத நிலை அடைந்தார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia