கீழைக் கங்கர்
கீழைக் கங்கர் என்பவர்கள் கலிங்கத்தை ஆண்ட அரச மரபினர் ஆவர். (தற்கால ஒடிசா முழுவதும், மேற்கு வங்காளம், சத்தீசுகர், ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள்) 11 நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆண்டார்கள்[1] அவர்களின் தலைநகர் கலிங்கநகராகும். இது தற்போது ஆந்திரப்பிரதேசந்தின் சிறீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிறிமுகலிங்கம் என்னும் ஊர் ஆகும். இவ்வூர் ஆந்திரத்துக்கும் ஒடிசாவுக்கும் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. கொனார்க் சூரியன் கோயில் இவர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டதாகும். இது யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களம் ஆகும் தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கபாடியை ஆண்டுவந்த மேலைக் கங்க அரசமரபிலிருந்து பிரிந்து சென்ற அனந்தவர்மன் சோட(ழ)கங்கன் தொடக்கி [2] வைத்த மரபே கீழைக் கங்கர் அரச மரபு ஆகும். அனந்தவர்மன் சோட(ழ)கங்கன் இறை பக்திமிக்கவன், கலைகளையும் இலக்கியங்களையும் ஆதரித்தவன். இவனே பூரியிலுள்ள புகழ் பெற்ற சகன்நாதர் கோவிலைக் கட்டியவன்.[3][4] கீழை கங்கர்கள் இசுலாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும் தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள். வணிகத்தின் மூலம் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு கோவில்கள் கட்டினார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் பானுதேவா ஆட்சியின் (1414 - 34) போது இம்மரபு முடிவுக்கு வந்தது.[5] ஆட்சியாளர்கள்![]()
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia