ஹரியங்கா வம்சம்
![]()
ஹரியங்கா வம்சம் (Haryanka dynasty) (ஆட்சி காலம்: கி மு 550 - 413) பிற்கால வேத காலத்திய மகத நாட்டை, பிரத்யோதா வம்சத்திற்கு பிறகு, ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும். கி மு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றிய இவ்வம்சம், ராஜகிரகத்தை தலைநகராகக் கொண்டு மகத நாட்டை ஆண்டது. பின்னர் ராஜகிரகத்திலிருந்து (தற்கால பிகாரின் தலைநகரான பாட்னாவிற்கு) தலைநகரத்தை பாடலிபுத்திரத்திற்கு மாற்றியது. ஹரியங்கா வம்சத்தை நிறுவியவர் பிம்பிசாரனின் தந்தை பாட்டியா ஆவார். மகதப் பேரரசில் அங்கம், கோசலம், காசி, மல்லம், வத்சம், குரு, வஜ்ஜி, பாஞ்சாலம், மத்சம் மற்றும் சூரசேனம் அடங்கியிருந்தன.[4] ஹரியங்கா வம்சத்திற்கு பின் சிசுநாக வம்சம் மகத நாட்டை ஆண்டது. ஹரியங்க வம்ச அரசர்கள்பிம்பிசாரன் (கி மு 546 – 494)ஹரியங்கா வம்ச அரசன் பிம்பிசாரன் பல போர்களினால் மகத நாட்டை விரிவு படுத்தினான். கோசல நாட்டையும் திருமண உறவினால் மகதத்துடன் இணைத்தார். மகாவீரரின் காலத்தில் வாழ்ந்த பிம்பிசாரன் கௌதம புத்தரிடம் முழு ஈடுபாடுடையவர் ஆவார். கி மு 491இல், தன் மகன் அஜாதசத்ருவால் சிறையில் பிடிக்கப்பட்டு, பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டார். அஜாதசத்ரு (கி மு 494 – 462)பேரரசர் அஜாதசத்ரு, மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.கோசல நாடு, வஜ்ஜி நாடு மற்றும் லிச்சாவி போன்ற மகாஜனபாதம் என்றழைக்கப்படும் குடியரசு நாடுகளை வென்றார். பின்னர் காசி நாட்டை வென்றார். உதயணன் (கிமு 460 – 440)உதயணன் காலத்தில் பாடலிபுத்திரம் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றானது. உதயன் ஒன்பது ஆண்டுகள் மகத நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின் அனுருத்திரன், முண்டன் மற்றும் நாகதாசகன் கி மு 413 வரை ஆண்டனர். பின்னர் மகத நாட்டை சிசுநாக வம்சத்தினர் ஆண்டனர். இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia